புதன், 14 ஜூன், 2023

கிரேக்க கடலில் படகு கவிழ்ந்து 59 அகதிகள் பலி

20230614060624-648995582c5e85ac8e1f5666jpeg

மாலைமலர் :கிரேக்க கடற்கரையில் அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பெலோபொன்னீஸில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
படகு கவிழ்ந்த தகவலை அடுத்து, கடற்படைக் கப்பல்களுடன் ராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டர், 6 படகுகளும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
இந்த விபத்தில் சிக்கி 59 அகதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 104 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சர்வதேச கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து பலத்த காற்றினால் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.link - stcatharinesstandar
இதுகுறித்து கடலோர காவல் படையினர் கூறுகையில், " அகதிகளை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 59 பேர் உயிரிழந்துள்ளனர்.


இதையடுத்து, இன்று அதிகாலை முதல் விரிவான மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது. கப்பலில் யாரும் லைஃப் ஜாக்கெட் அணியவில்லை. அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை உடனடியாக தெரியவில்லை.
ஆனால், இவர்கள் லிபியாவிலிருந்து புறப்பட்டு இத்தாலி நோக்கிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றார்.

கருத்துகள் இல்லை: