சனி, 8 ஏப்ரல், 2023
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியம்- அமைச்சர் மா. சுப்பிரமணியன்
maalaimalar : சென்னை:
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* கொரோனா பாதிப்பில் உள்ளவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
* ஆக்ஸிஜன், படுக்கைகள், மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன.
* தினமும் 4000 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
* மருத்துவமனைகளில் அறிகுறிகளுடன் வருபவர்களை பரிசோதனை செய்ய அறிவுறுத்தி உள்ளோம்.
* கொரோனா கொத்து கொத்தாக பரவவில்லை.... தனி நபர் பாதிப்பு தான் அதிகம்.
* விமான நிலையங்களில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு.
* தமிழகத்தில் கிளஸ்டர் பாதிப்பாக கொரோனா இன்னும் மாறவில்லை; தனிநபர் பாதிப்பு தான் அதிகம்.
* பொது இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியம்.
* பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக