மின்னம்பலம் - கவி : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் எம்,பி.கார்த்தி சிதம்பரத்தின் 11.04 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை இன்று (ஏப்ரல் 18) முடக்கியுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு, ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்டியது. இதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்தது. இதில் முறைகேடு நடந்ததாக அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் 2019ஆம் ஆண்டு ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. இதே வழக்கில் அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிந்து ப.சிதம்பரத்தை கைது செய்தது. பின்னர் இரண்டு வழக்குகளிலும் ப.சிதம்பரம் ஜாமீன் பெற்றார்.
அதுபோன்று இவ்வழக்குகளை எதிர்கொண்ட கார்த்தி சிதம்பரம் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்தசூழலில் ஐஎன்எக்ஸ் வழக்கில், சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.11.04 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டத்தில் உள்ள மூன்று அசையும், ஒரு அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
பிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக