Susairaj Babu : வட மாநில அரசுகளுக்கெல்லாம் வழிவிட்ட, மைசூர் சமஸ்தானம்,
வட மாநில சித்தாந்தங்களுக்கெல்லாம் வழிவிட்ட மைசூர் சமஸ்தானம்,
இவை அனைத்தையும் எதிர்த்து,
மண்ணில் மக்களுக்காகவும் சாதி பாகுபாடுகளை எதிர்த்தும், தேவையற்ற யாகங்கள் பூஜைகளை எதிர்த்து, மகான் பசவவன்னர் ஏற்படுத்தியதுதான் லிங்காயத்து மதம்.
அந்த லிங்காயத்து ( சாதி மத பாகுபாடற்ற, ஆகம வழிமுறை வழிப்பாட அற்ற மதம்) லிங்காயத் மக்களின் பேராதவு பெற்ற எடியூரப்பா அவர்களின் துணை கொண்டு பிஜேபி கர்நாடகத்தில் ஆட்சியை அமைத்தது.
சித்தாந்தத்தோடு கேள்வி கேட்க யாருமே இல்லை.
ஒருவன் தோன்றினான்,
திரு. சேத்தன் அவர்கள், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்.
சாதிய பாகுபாடு இல்லாத ஒரு சமுதாயம், பாலின பாகுபாடு இல்லாத ஒரு சமுதாயம், ஏற்றத்தாழ்வு இல்லாத மனிதநேயத்தை மதிக்கக் கூடிய ஒரு சமுதாயம் உருவாக பல மேடைகளில் பேசினார்.
அவர் அலுவலகத்தில் அம்பேத்கர் தந்தை பெரியார், சாகு மகராஜ், ஜோதிராய் பூலே, அம்பேத்கர் , போன்றவர்களின் படம் இருக்கும்.
ஆனால் அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் அல்ல.
அவர் கர்நாடக மாநிலத்தில் பேசிய அனைத்து மேடைப்பேச்சுகளும் அங்கு சர்ச்சையாகவே பார்க்கப்பட்டது.
காந்தாரா திரைப்படத்தை ஒட்டி அவர் பேசிய பேச்சு, மண்ணின் மக்களின் கலாச்சாரம் வழிபாடுகளை, இவர்கள்( சனாதனவாதிகள்) திருடுகிறார்கள். என்ற பேசினார்.
அதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். இன்றும் இந்துத்துவாவை பற்றி அவர் கேள்வி எழுப்பி பேசியதால் மீண்டும் ஒரு முறை இன்று கைது செய்யப்பட்டுள்ளார்
மகான் பசவன்னரை பற்றிய
ஒரு சிறு குறிப்பு இப்பதிவின் கமெண்டில் பாருங்கள்.
Susairaj Babu : பசவண்ணர்,,,
சிவவழிபாட்டின் மூலம் வீடு பேற்றை அடையலாம் என்பது இவரது ஆழ்ந்த நம்பிக்கை.
சாதிப்பாகுபாடு, சடங்கு, உருவ வழிபாடு இவற்றை களைவதில் பெரிதும் ஈடுபட்டார். .
சமூக சீர்திருத்த வாதியாக விதவை மறுமணத்தை ஆதரித்தும்,
குழந்தை திருமணத்தை எதிர்த்தும் செயல்பட்டார்.
அனைத்து வேதங்களையும் படித்து தெளிவு பெற்று மனிதனை மனிதன் மதிக்க வேண்டும் "கர்மா ' என்று ஒன்று இல்லை என முழங்கி அனைத்து மக்களையும் ஒன்றினைந்து புதிய வழிப்பாட்டு முறையுடன் புதிய சமயத்தை கருநாடக மாநிலத்தில் உருவாக்கினார்.
"இன்று இச்சமயத்தில் லிங்காயித்து என்று ஒரு பிரிவினரூம். மற்றொரு பிரிவினர் வேதங்களை ஏற்றுக் கொண்டு "வீர சைவர்கள்" என்று தனி பிரிவாக உள்ளனர்.
இரு பிரிவினரும் வணங்குவது பசவண்ணரையே. தமிழகத்திலும் இவ்வழிப்பாட்டு முறை உண்டு .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக