மாலைமலர் : சென்னை: தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த போலீசார் அனுமதி அளிக்காததை தொடர்ந்து அந்த அமைப்பின் நிர்வாகிகள் ஐகோர்ட்டை நாடினர்.
இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
இதைதொடர்ந்து தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த போலீசார் இன்று அனுமதி அளித்துள்ளனர்.
இதையடுத்து வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தப்படுகிறது.
இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த முறை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத நல்லிணக்க மனித சங்கிலி நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனால் சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த முறையும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போட்டியாக யாரும் பேரணி, ஆர்ப்பாட்டங்களை அறிவிக்க வாய்ப்பு உள்ளதா? என்பது பற்றியும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
பேரணி நடைபெறும் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநகர பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுஉள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக