பிபிசி : தர்மசாலா: தலாய்லாமா சிறுவனுக்கு முத்தம் தந்த விவகாரம் மிகப்பெரிய விஸ்வரூபமெடுத்துள்ளது..
இதற்கு உலகம் முழுவதிலுமிருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன.. இதனிடையே, சிறுவனின் உதட்டில் முத்தமிட்டதற்கு மன்னிப்பு கேட்பதாக திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லாமா அறிவித்துள்ளார்.
சிறுவனின் உதட்டில் திபெத்திய ஆன்மிக தலைவரான தலாய்லாமா முத்தம் கொடுத்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை நாடான திபெத்தில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.. இங்கு வசித்து வருபவர் தலாய்லாமா… இவர் ஒரு ஆன்மீக தலைவர் ஆவார்..
இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் தற்சமயம் தங்கியிருக்கிறார்.. அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர்.
இவர் ஒரு சிறுவனுக்கு முத்தம் தருவதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.. அந்த ஒருவன், தலாய்லாமாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறான்..
அப்போது அந்த சிறுவனின் வாயில் தலாய்லாமா முத்தம் கொடுக்கிறார்.. தன்னுடைய நாக்கை நீட்டி, சிறுவனின் நாக்கால் தன் நாக்கை தொடும்படி தலாய்லாமா சொல்கிறார்..
இந்த காட்சி அப்படியே அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது… அதில், தன் காலில் விழுந்த ஒரு சிறுவனின் வாயில் அவர் முத்தம் கொடுக்கிறார்.
மேலும், தன் நாக்கை நீட்டி சிறுவனின் நாக்கால் தன் நாக்கைத் தொடும்படி அவர் கூறுவது, அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது…
அதாவது, “என் நாக்கை நீ முத்தமிட முடியுமா” என்று அந்த சிறுவனிடம் தலாய்லாமா கேட்கிறார்.. இதை பார்த்த பலரும் கொந்தளித்து போயுள்ளனர்.. இதெல்லாம் அருவருப்பானது, கேவலமானது, கண்டனத்திற்குரியது, ஒரு ஆன்மீதக தலைவர் செய்யக்கூடிய வேலையா?
இதெல்லாம் என்றெல்லாம் கண்டனங்கள் உலகம் முழுவதிலும் இருந்து குவிந்து கொண்டிருக்கிறது. ட்விட்டரில் இந்த வீடியோவை ஜூஸ்ட் ப்ரோக்கர்ஸ் என்பவர் ஷேர் செய்திருக்கிறார்..
அத்துடன், “தலாய்லாமா ஒரு புத்த நிகழ்வில் ஒரு இந்திய சிறுவனை முத்தமிடுகிறார்.. மேலும் அவரது நாக்கை தொடவும் முயற்சிக்கிறார். அவர் உண்மையில் “என் நாக்கை தொடு” என்று சொல்கிறார்..
இப்போது அவர் அதை ஏன் செய்வார்?” என்று கேள்வி எழுப்புயுள்ளார்.. “இது பொருத்தமற்றது, இந்த தவறான நடத்தையை யாரும் நியாயப்படுத்தக்கூடாது தலாய்லாமா” என்று இன்னொரு ட்விட்டர் பயனாளி தீபிகா புஷ்கர் நாத் எழுதினார்.
அதேபோல, ஜாஸ் ஓபராய் என்பவர், “நான் என்ன பார்க்கிறேன்? இது தலாய்லாமா தானா? குழந்தைகள் மீது காம இச்சை காட்டும் அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
இது மிகவும் அருவருப்பானது” என்று காட்டமாக கூறியுள்ளார்.. தலாய் லாமா செய்தது அத்துமீறல் என்று பலரும் சொல்லிவர, தலாய் லாமா விளையாட்டாகவே சிறுவனுக்கு முத்தமிட்டார் என்று ஆதரவு தந்துவருகிறார்கள் மேலும் பலர்..
கடந்த 2019ல், இப்படிதான் ஒரு சர்ச்சையில் சிக்கினார் தலாய்லாமா.. பெண் தலாய்லாமா பற்றி சொன்னபோது, “என்னுடைய பொறுப்புக்கு ஒரு பெண் வருவதெனில் அவர் அதிக கவர்ச்சியாக இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்..
சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் போற்றும் புத்த மதத்தின் தலைவராக இருக்கும் தலாய் லாமா இப்படி பேசலாமா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன..
புத்த மதத்தில் அறிவை போன்று அழகுக்கும் போதிய அளவு முக்கியத்துவம் இருப்பதாக தலாய்லாமா இதற்கு காரணம் கூறி சமாளித்தாலும், கண்டனங்கள் நிறைய வலுத்ததால் தான் பேசியதற்கு அப்போது தலாய்லாமா மன்னிப்பு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சிறுவனின் உதட்டில் முத்தமிட்டதற்கு மன்னிப்பு கேட்பதாக திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லாமா அறிவித்துள்ளார்.. “சிறுவன், அவரது குடும்பம் மட்டுமின்றி உலக சகோதரர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.
தன்னுடைய செயல் காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். பொதுஇடம், கேமரா முன் அப்பாவி, விளையாட்டுத்தனமாக தான் செயல்படுவது என் வழக்கம்” என்று தலாய்லாமா விளக்கம்அளித்துள்ளார் .
சிறுவனுக்கு முத்தமிட்ட தலாய்லாமா தனது நாக்கை நீட்டி அதில் முத்தமிடகூறிய வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக