புதன், 22 மார்ச், 2023

மந்தைவெளி வெளிவட்ட சாலைக்கு டி.எம் சவுந்தர ராஜன் பெயர்.. அரசாணை வெளியீடு

 மாலை மலர் :  பிரபல பாடகரான டி.எம்.சவுந்தர ராஜன் கடந்த 2013-ஆம் ஆண்டு காலமானார்.
இவரது நூற்றாண்டு விழா வரும் 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
பிரபல பாடகரான டி.எம்.சவுந்தர ராஜன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், நாகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
இவர் திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுத்தமான தனித்தனி குரலில் பாடி அவர்களின் முகத்தை ரசிகர்களின் கண்முன் நிறுத்தும் திறமை கொண்டவர். டி.எம்.சவுந்தர ராஜன்
இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் படங்களுக்கும் பாடல்கள் பாடியுள்ளார்.
பத்ம ஸ்ரீ விருது பெற்ற இவர் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் 2500-க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்.


இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார்.
இந்நிலையில், டி.எம்.சவுந்தர ராஜனின் 100-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை மந்தைவெளியில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் வெளிவட்ட சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படுகிறது.
இதன் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வரும் 24-ஆம் தேதி அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் அன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: