புதன், 22 மார்ச், 2023

பருத்தித்துறையில் 10 படகுகள் தீக்கிரை.. உள்ளூர் கோஷ்டி மோதல்?

%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+10+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%21

hirunews.lk  : பருத்தித்துறையில் 10 படகுகள் தீக்கிரையாகின!
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை காவல்துறை பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் க்கிரையாக்கப்பட்டுள்ளன.
கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களின் இந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமான படகுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கான காரணம், சந்தேக நபர்களோ கண்டறியப்படாத நிலையில் பருத்தித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: