Dhinakaran Chelliah : பிராம்மணீயம்
பிராம்மணர்களைப் பற்றி ஶ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள்
சத்தியார்த்தப்பிரகாசம் ” எனும் நூலில் எழுதுகிறார்;
பிராம்மணர்களே வித்தை யற்றவர்களாகும் பொழுது ஷத்திரியர்கள் வைசியர்கள் சூத்திரர்கள் அறிவற்றுப்போவதைப் பற்றிக்கேழ்ப்பானேன். தலை
முறை தலைமுறையாய அர்த்தத்துடன் வேதம் முதலான சாஸ்திரங்களை ஓதி
வந்ததும் மறைந்து விட்டது. கேவலம் ஜீவனோபாயத்திற்கு மாத்திரம்
பிராம்மணர்கள் பாடஞ் செய்து வந்தார்கள். அதைக்கூட அவர்கள் சத்திரியர்
களுக்கும் பிறர்களுக்கும் சொல்லிக் கொடுக்கவில்லை. அவித்வான்கள் ஜனங்களின் போதகர்களாகவே வஞ்சனை, கபடம், புரட்டு, அதர்மம் முதலானவைகள் விருத்தியாயிற்று. பிராம்மணர்கள் தங்கள் ஜீவனத்திற்கு ஏதாவது ஒரு வழிதேட வேண்டுமென்று யோசித்து நிச்சயஞ் செய்து கொண்டு ஷத்திரியர் முதலானவர்களுக்கு “நாங்கள் தான் உங்களுடைய பூஜ்ய தேவதைகள்.எங்களை வணங்காமல் உங்களுக்கு முக்தி கிடையாது. எங்களைப் பூஜை செய்யாமல் போனால் கஷ்டமான நரகத்தில் விழுவீர்கள்" என்று உபதேசஞ் செய்தார்கள்.
வோங்களிலும் ரிஷி முனிகளால் வரையப்பட்ட சாஸ்திரங்களிலும் பூர்ண வித்தையை உடையவர்களையும் தார்மிகர்களையும் பிராம்மணன் என்று சொல்லுவது போக இப்பொழுது மூர்க்கனும் தூர்த்தனும், காமியும் வஞ்சகனும்,தர்மமற்றவனும் பிராம்மணன் என்று கூறிக்கொண்டு தன்னுடைய
வழிப்பாட்டைத் தேடுகிறான். உண்மை வித்வான்களுடைய குறிகள் இவர்களிடம் எவ்விதமாய் விளங்கும்? ஷத்திரியர்கள் முதலானவர்கள் சம்ஸ்கிருதம்
முழுவதும் அறியாமல் போகவே பிராம்மணர்கள் சொல்லும்படியான கட்டுக்
சுதைகளை யெல்லாம் உண்மையென நம்பினார்கள். பெயரினால் மாத்திரம்
பிராம்மணர்களாயிருக்கும் இவர்கள் தைரியமாய் தங்களுடைய மாயவார்த்தைகளினால் அவர்களைக்கட்டி अक्षवाक्यं जनार्दनः ॥ என்பதைப் படித்துக்கொடுத்தார்கள், “ பிராம்மணன் முகத்திலிருந்துவரும் வார்த்தைகளெல்
லாம் நேராக பகவான் வாயிலிருந்தே" வந்தது என்பதாம்.
வித்தையைவிட தனத்தை அதிகம் கொண்டிருந்த இச்ஷத்திரியர்கள்
அவர்களினுடைய ஆட்டத்திற்கு ஆளான பிறகு பெயரினால் பிராம்மணர்களான
இவர்களுக்கும் விஷய சுகங்களை அனுபவிக்கத் தக்கக்சமயம் வாய்த்தது. பூமியிலிருக்கும்படியான நல்ல பதார்த்தங்கள் சகலமும் பிராம்மணர்களுக்கென்றே
சொன்னார்கள். சுருங்கச்சொல்லுங்கால் குணம் கர்மம் சுபாவம் இவைகளினால்
ஏற்படும் பிராம்மணன் முதலான வர்ணவியவகாரங்களை நாசப்படுத்தி பிறப்பினாலுண்டாகிற தென்றுவைத்தார்கள். இறந்தவர்களின் பேரில்கூட எஜமானர்களிடமிருந்து தானங்கள் வாங்கிக்கொள்ள வாரம்பித்தார்கள். இவர்கள் மனம் போன பிரகாரம் காரியம் செய்யவாரம்பித்தார்கள். “நாங்கள் தான் பூதேவர்கள்” என்றும் எங்களுடைய பணிவிடை யன்னியில் தெய்வலோகம் எவருக்கும் கிடையா” தென்றும் சொன்னார்கள். புழு பூச்சி எரும்பு முதலியவைகளாக மாறி கோர நரகத்தைவிட இழிவான உலகத்தையடைய யோக்கியதையற்ற காரியத்தைச்செய்யும் அவர்களை உங்களுக்கு எவ்வுலகம் கிடைக்குமோ" என்றால் கடுஞ்சினங்கொண்டு அவர்கள் “பிரம்ம துரோகிவினஸ்யதி” என்கிற பிரகாரம் நாங்கள் உங்களைச்சபித்தால் நாசமடைவீர்கள் என்று சொல்லுவார்கள்,
பூர்ணவேதஞ்ஞானமிருந்து பரமாத்மாவை அறியும் படியானவும் தர்மாத்மாக்களனவுமான உலக உபகாரிகளை எவன் தூஷிக்கிறானோ அவன் அவசியம் நரகத்தை யடைவான். அவர்களைப் பிராம்மணர்களென்றாவது அவர்களை சேவை செய்யவாவது கூடாது.
****
ஶ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி மகராஜ் அவர்கள் நவீன ஹிந்து சீர்திருத்தவாதியாக அறியப்படுகிறார். சதி,பால்யவிவாகம், சிலை வணக்கம், பலியிடுதல், பாதயாத்திரை,வைதிக கர்மானுஷ்டான சடங்குகள்,வர்ணாசிரம சாதிப்பிரிவினை,பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் போன்றவற்றை கடுமையாக எதிர்த்தவர். 60 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர், வேத கால மதமே சிறந்தது என ஆர்ய சமாஜத்தை நிறுவியவர்.எதிரிகள் நடத்திய கொலைத் தாக்குதலுக்கு பலமுறை தப்பினாலும், இறுதியில் அருந்திய பாலில் கண்ணாடித் துகள்கள் கலந்திருந்ததால், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.சுவாமி
இறுதிவரை பிராம்மணர்களை எதிர்த்தாலும்,பிராம்மணீயத்தை எதிர்த்ததாகவே எடுத்துக் கொள்கிறேன்.
சுவாமிஜி எழுதிய “சத்தியார்த்தப்பிரகாசம்” (1928)நூலை தமிழில் மொழி பெயர்த்தவர் திரு எம்.ஆர்.ஜம்புநாத ஐயர் அவர்கள்.
பி.கு: பின்னூட்டத்தில் “சத்தியார்த்தப்பிரகாசம்” நூலின் முகப்பும் மற்ற சில பக்கங்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக