tamil.samayam.com : PAK vs SL: 'யாரா இருந்தாலும், எவனா இருந்தாலும் அடிப்போம்': இலங்கை ஹாட்ரிக் வெற்றி..பாக்கிஸ்தான் படுதோல்வி!
ஆசியக் கோப்பை தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான், இலங்கை அணிகள் ஏற்கனவே தகுதிபெற்றுவிட்டன. இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் கடைசி போட்டியில் இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதின. இப்போட்டியில் வெற்றி, தோல்வியை பெற்றால் எந்த பயனும் கிடையாது என்பதால், இப்போட்டியில் இரு தரப்பும் பதற்றம் இல்லாமல் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பாகிஸ்தான் இன்னிங்ஸ்:
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஓபனர்கள் முகமது ரிஸ்வான் 14 (14), பாபர் அசாம் 30 (29) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. தொடர்ந்து பக்கர் ஜமான் 13 (18), இப்டிகார் அகமது 13 (17) ஆகியோரும் சொதப்பி ஆட்டமிழந்தனர்.
இறுதியில் முகமது நவாஸ் 26 (18) ஓரளவுக்கு அதிரடி காட்டியதால் பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 121/10 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தது.
இலங்கை இன்னிங்ஸ்:
இலக்கை துரத்திக் களமிறங்கிய இலங்கை அணியில் ஓபனர் குஷல் மெண்டிஸ் முகமது ஹோர்னைன் பந்துவீச்சில் கோல்டன் டக் ஆனார். அடுத்து, குணதிலகாவும் 0 (4) ஹரிஸ் ராஃப் பந்துவீச்சில் டக் அவுட் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஓபனர் பதும் நிஷங்காவும் பார்ட்னர்ஷிப் அமைத்த ராஜபக்ஷாவும் 24 (19) பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. அடுத்து நிஷங்காவும் ஷனகா 21 (16) நிதானமாக விளையாடி ஆட்டமிழந்தார். அடத்து ஹசரங்கா 10 (3) அதிரடி காட்டியதால் இலங்கை அணி 17 ஓவர்களில் 124/5 ரன்களை எடுத்து வெற்றியைப் பெற்றது. ஓபனர் நிஷங்கா 55 (48) கடைசி வரை களத்தில் இருந்தார்.
நாளை மறுநாள் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக