tamil.asianetnews.com - Raghupati R : காவல்துறையின் பேச்சை, காவலர்களே மதிப்பதில்லை என்பது பொதுமக்களுக்கு தெரிந்த விஷயம் தான். ஆனால், ரவுடிகளை போல, அடாவடி செய்து பணம் பறித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போக்குவரத்து காவலர்கள் வாகன ஓட்டிகளிடம் இருந்து லஞ்சம் வாங்கினால் 6 மாதம் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று காவல்துறை சில மாதங்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது link கர்ப்பிணி பெண்ணுடன் வந்த ஆட்டோ! 1500 லஞ்சம் கேட்ட டிராஃபிக் போலீஸ்!
காவல்துறையின் பேச்சை, காவலர்களே மதிப்பதில்லை என்பது பொதுமக்களுக்கு தெரிந்த விஷயம் தான். ஆனால், ரவுடிகளை போல, அடாவடி செய்து பணம் பறித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. அதில் ஆட்டோ ட்ரைவர் ஒருவருக்கு, அதிவேகமாக வந்தார் என்று 1,500 அபராதம் விதித்தனர். ஆனால் அந்த ட்ரைவர் வேகமாக வரவில்லை, காவலர் வேண்டுமென்றே அபராதம் விதித்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கர்ப்பிணி பெண் ஒருவர் வலியால் துடிக்க, ஆட்டோ ட்ரைவரிடம் லஞ்சம் போலீசார் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் இரவு பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே செம்பியம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். இரவு சுமார் 12 மணியளவில் அந்த வழியில் ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அது ஒரு வழிப் பாதை என்பதால் அந்த ஆட்டோவை போலீசார் நிறுத்தச் சொல்லி உள்ளனர்.
அந்த ஆட்டோவில் கைக்குழந்தை உடன் கர்ப்பிணிப் பெண் ஒருவர் இருந்துள்ளார் ஆட்டோ ஓட்டுநருக்குப் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாலமுரளி 1500 ரூபாய் அபராதம் விதித்து உள்ளார். அபராதத்தைச் செலுத்திவிட்டுச் செல்லுமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த ஆட்டோ ஒட்டுநர், உள்ளே கர்ப்பிணிப் பெண் குழந்தையுடன் இருப்பதாலும் இரவு நேரத்தில் இந்த வழியாக வந்தேன் என்றும் அவசரமாகச் செல்ல வேண்டும் என்பதால் இந்த ஒரு முறை மன்னித்து விடுங்கள் என்று கேட்க, அந்த ஆய்வாளர் கேட்கவில்லை.
இது ஒன்வே. ஒரு வழி பாதையில் தவறாக வந்ததற்கு 1500 ரூபாய் அபராதம். அதை முதலில் கட்டு என்று கேட்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அந்த வீடியோவை பதிவிட்ட நபர்கள் உதவி ஆய்வாளர் மதுபோதையில் இருந்ததாக கூறி பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக