ஞாயிறு, 22 மே, 2022

ஒரே ஆண்டில் மக்களின் அமோக ஆதரவை பெற்ற முதலமைச்சர் பட்டியலில் மு.க.ஸ்டாலினுக்கு முதலிடம்!

 கலைஞர் செய்திகள்  - ஜனனி  " 5 மாநிலங்களின் முதலமைச்சர்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள்தான் அதிகப்படியான மக்களின் ஆதரவையும் திருப்தியையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே ஆண்டில் மக்களின் அமோக ஆதரவை பெற்ற முதலமைச்சர் பட்டியலில் மு.க.ஸ்டாலினுக்கு முதலிடம்!
ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த 5 மாநிலங்களின் முதலமைச்சர்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள்தான் அதிகப்படியான மக்களின் ஆதரவையும் திருப்தியையும் பெற்றுள்ளதாக சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு, புள்ளி விபரங்களுடன் தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. இந்த மாநிலங்களில் புதிய அரசுகள் ஆட்சிப்பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் முதலமைச்சர்களின் செயல்பாடுகள் மீது அந்தந்த மாநில மக்கள் எந்தளவிற்கு திருப்தி தெரிவிக்கிறார்கள் என பிரபல சி வோட்டர்ஸ் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது.
ஒரே ஆண்டில் மக்களின் அமோக ஆதரவை பெற்ற முதலமைச்சர் பட்டியலில் மு.க.ஸ்டாலினுக்கு முதலிடம்!

இந்த கருத்துக்கணிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான், தமது செயல்பாடுகளால் அதிகப்படியான மக்களின் ஆதரவை பெற்று முதலிடத்தில் இருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடு குறித்து கிட்டத்தட்ட 85 சதவிகித தமிழ்நாட்டு மக்கள் திருப்தியும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

இதில் 40.72 சதவிகிதத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் முழுமையான திருப்தியை அளிப்பதாகவும் 43.85 சதவிகிதத்தினர் திருப்தி அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் 81 சதவிகித மக்களுக்கு திருப்தியை அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா 77.7 சதவிகிதத்தினரின் ஆதரவுடன் 2ம் இடத்திலும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் 72 சதவிகித ஆதரவுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இந்த வரிசையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி 61 சதவிகித ஆதரவுடன் கடைசி இடத்தில் உள்ளதாக சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை: