ராதா மனோகர் : கண்ணதாசன்களும் வாலிகளும் விசுவநாதன்களும் புகழின் உச்சியில் இருந்த காலங்களில் யார் யாரோ எல்லாம் எழுதி யார் யாரோ எல்லாம் இசையமைத்த பல அருமையான பாடல்களை எல்லாம் கண்ணதாசன் வாலி விஸ்வநாதன்களின் பாடல்களாகவே கருதப்பட்டது
இந்த வரிசையில் பின்பு இளையராஜாவும் வைரமுத்துவும் வந்தார்கள்
தமிழ் திரையுலகம் எத்தனையோ அற்புதமான கவிஞர்களையும் இசை மேதைகளையும் கண்டிருக்கிறது
விளம்பர உலகின் தவறுகளால் கட்டமைக்கப்பட்ட பொதுப்புத்தி என்பது ஒரு ஈவு இரக்கம் அற்ற வில்லனாகவே பல சமயங்களிலும் இருந்திருக்கிறது
அரசியலில் இந்த பொதுப்புத்தி என்பது வெளிப்படையாகவே தெரியும்
கலைஞர் என்றதும் உச்ச ஸ்தாயியில் நீட்டி முழக்கி ராகங்கள் பாடும் பொதுப்புத்தியில் எம்ஜியார் ஜெயலலிதா என்றது தாலாட்டு பாட தொடங்கி விடும்
வேதம் புதிது படத்தில் வந்த கண்ணுக்குள் நூறு நிலவா பாடல் இளையராஜாவின் பாடல் என்றே பலரும் கருதுவார்கள்
உண்மையில் அது அதிகம் அறியப்பட்டிராத தேவேந்திரன் என்ற அற்புத கலைஞரின் இசையமைப்பில் வைரமுத்துவின் கவிதை வரிகளில் உருவானது
இந்த பாடல் வெறுமனே ஷண்முக பிரியா ராகத்தின் அழகை மட்டும் காட்டவில்லை .
அசப்பில் கே வி மகாதேவன் இசையில் தெரியும் தாளக்கட்டின் துள்ளல் மேன்மையும் ஒருங்கே கொண்டிருக்கும் அற்புத படைப்பாகும்
திரைப்பாடல்களில் ஷண்முக பிரியா ராகத்தை பலர் அழகாக கையாண்டிருக்கிறார்கள்
ஆனால் பொதுப்புத்தி என்பது ஷண்முக பிரியா ராகத்தை இளையராஜா தந்தன தந்தன தாளம் வரும் பாடல் மூலம் தான் உலகுக்கே அறிமுகப்படுத்தி இருப்பதாக கருதுவது போல் தெரிகிறது
சமுக ஊடகத்தில் இது பற்றிய ஒரு ஓவர் பில்டப்பை கண்டதால் தான் இந்த பதிவு
இதற்கும் இளையராஜாவின் மோடி கருத்துக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை
பொதுப்புத்தி முட்டாள்தனங்கள் எங்கிருந்தாலும் கிளறவேண்டியதுதான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக