சனி, 23 ஏப்ரல், 2022

சபரிமாலா தன்னை அறியாமலே ஜிஹாதியாக மாறிவிடுவாரா? மத தீவிரவாதம் பற்றிய ஆய்வுக்கட்டுரை!


 Rishvin Ismath
:  Birds of a feather flock together என்று சொல்வார்கள்.
அதே போன்று Coming events cast their shadows before என்றும் சொல்வார்கள்.
இவற்றைச் சொல்லி விட்டதால் சபரிமாலாவை ஜிஹாதி என்றோ, பயங்கரவாதி என்றோ சொல்லிவிட்டேன் என்று தயவு செய்து யாரும் தப்பாகக் கருதிவிட வேண்டாம்.
எனினும் இஸ்லாம் மதத்தைப் பின்பற்ற முற்படும் ஒருவர், தனது பின்பற்றுதலை மக்கா இஸ்லாத்துடன் மட்டுப் படுத்திக் கொள்ளாமல்,
இஸ்லாத்தின் இறைதூதர் என்றும், அழகிய முன்மாதிரி என்றும் சொல்லப்படுகின்றவரின் மதீனா வாழ்க்கையையும் சேர்த்துத் தீவிரமாகப் பின்பற்ற முயலும் பொழுது,
அவர் தன்னை அறியாமலே ஜிஹாதியாக மாறிவிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகின்றது என்ற எச்சரிக்கையை விடுக்காமல் இருக்க முடியாதுள்ளது.
போஸ்ட், போட்டோ, வீடியோ என்று போட்டு நன்கொடைகளுக்காக விளம்பரம் தேடும் ஆர்வக் கோளாறு அதிகரித்து,
அதனால் இஸ்லாத்தில் அதிகம் மூழ்கிவிடாமல், ஆடுற மாட்டை ஆடியும், பாடுற மாட்டை பாடியும் கறந்து கொள்வதுடன் சபரிமாலா தனது செயற்பாடுகளை மட்டுப்படுத்திக் கொள்வார் என்றால் அது அவருக்கு நல்லாதாக இருக்கும்.
 (அவரால் தூண்டப்பட்டு யாரும் ஜிஹாதிகளாக மாறாமல் இருந்தால் சரி தான்)
இன்றைய ISIS ஆகட்டும், அன்றைய முகம்மது நபியின் கூட்டம் ஆகட்டும், இவற்றுக்கிடையில் நாம் ஒரு பொதுவான விடயத்தைக் கவனிக்க வேண்டும்,
அதாவது முஹம்மது நபியின் மதீனா வாழ்க்கையில் அவரோடு இணைந்து அன்று வன்முறைகளில் பங்கெடுத்தவர்களில் 99.99% பேர் வேறு மதங்களில் இருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்கள் என்பதே கவனத்தில் கொள்ள வேண்டிய அந்த விடயம் ஆகும்.

இவ்வருட பாரூக் நினைவேந்தல் நிகழ்வை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி, அதற்காகத் தலைமையேற்றுச் செயற்பட்ட ஜிஹாதியும் கூட இஸ்லாத்திற்கு மதம் மாறிய ஒருவன் என்பதை FIR திரைப்படத்தின் உண்மையான வில்லன் கதாபாத்திரமான பயங்கரவாதத் தலைவன் ‘கார்த்திக்..’ உடன் ஒப்பிட்டு நேற்றைய தினம் எழுதி இருந்தேன்.  ஜிஹாதிகளில் அல்லாஹ்வுக்காக உயிரைக் கொடுத்து சுவர்க்கம் செல்லவேண்டும், 72 கன்னிகள் கிடைக்கும் என்று நம்புகின்றவர்களே அதிகம், இருந்தாலும் வன்முறை இயல்பு, பெண்களுக்கு எதிரான வன்முறை, சொந்த சமூகத்திற்கு எதிரான வெறுப்பு போன்ற காரணங்களால் தூண்டப்படுபவர்களும் கூட மதம் மாறி ஜிஹாதிகளாக பரிணாமம் பெறுவதும் நிகழ்வதுண்டு.

எங்கிருந்து வந்தாலும் ஜிஹாதிகள் ஆபத்தானவர்களே, அதே போன்று மிதவாதிகளாக, இடதுசாரிகளாக, முற்போக்காளர்களாக அல் தக்கியா (புனிதப் பாசாங்கு) பண்ணும் இஸ்லாமியவாதிகளும் ஆபத்தானவர்களே. பாதுகாப்பிற்கும், அமைதிக்கும் பங்கம் விளைவிக்கக் கூடியவர்கள் எங்கிருந்தாலும், என்ன வேடம் போட்டாலும், அவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருப்போம்.

கருத்துகள் இல்லை: