செவ்வாய், 6 அக்டோபர், 2015

நேருவின் மருமகள் நயன்தாரா ஷேகல் சாகித்ய அகடாமி விருதை திருப்பி கொடுத்தார்

முன்னாள் பிரதமர் நேருவின் மருமகள் நயன்தாரா ஷேகல் சாகித்ய அகடாமி விருதை திருப்பி கொடுத்துவிட்டார். வன்முறைகள் அதிகரித்துவரும் நிலையில் பிரதமர்மோடி மவுனமாக இருக்கிறார் என்று கடுமையாக விமர்சனம் செய்துஉள்ளார். உத்தரபிரதேச மாநிலம், தாத்ரியில் உள்ள பிசோதா கிராமத்தில் ஒரு குடும்பத்தினர், பசுவை அடித்துக்கொன்று சமைத்து சாப்பிட்டதாக கோவிலில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு இக்லாக் (வயது 50) என்பவரது வீட்டுக்குள் கடந்த 28–ந் தேதி புகுந்த ஒரு கும்பல், அவரை அடித்துக்கொன்று விட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரும் விமர்சனங்கள் எழுந்து உள்ளது. இச்சம்பவத்திற்கு அரசியல் சாயம் பூசாதீர்கள் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டு உள்ளது. ஆனால் இவ்விவகாரத்தை கையில் எடுத்து உள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறது. 


இந்நிலையில் முன்னாள் பிரதமர் நேருவின் மருமகள் நயன்தாரா ஷேகல், தனக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகடாமி விருதை மத்திய அரசிடம் திருப்பி கொடுத்தார். நாட்டில் வெறுப்புணர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், கொடூரமான ஆதிக்கம் தொடர்பாக பிரதமர் மோடி அமைதி காப்பதற்கு எதிராகவும் தனக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகடாமி விருதை நயன்தாரா ஷேகல் திருப்பி கொடுத்து உள்ளார். ‘ரிச் லைக் அஸ்(1985)’- என்ற ஆங்கில நாவலுக்கு கடந்த 1986ம் ஆண்டு நயன்தாரா ஷேகலுக்கு சாகித்ய அகடாமி விருது வழங்கப்பட்டது. 

“ இன்றைய ஆட்சி கொள்கையானது ஒருதலைப்பட்சமாக உள்ளது, இது என்னை மிகவும் கவலை அடையச்செய்து உள்ளது. இதுவரையில் நாம் ஒருதலைப்பட்சமான அரசை கொண்டது கிடையாது. நான் விரும்பியதை செய்கின்றேன்,” என்று கூறிஉள்ளார். நாட்டில் உள்ள மத மோதல்கள் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்காமல் மவுனம் காப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிஉள்ள நயன்தாரா ஷேகல் நாட்டில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாடு சிதைந்து வருவதால்விருதை திருப்பி அளித்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். 

தாத்ரி சம்பவத்தை குறிப்பிட்டு உள்ள அவர், இதுபோன்ற வழக்குகளில் நீதி கிடைக்கப்படவில்லை. இந்த பயங்கரமான ஆட்சி தொடர்பாக் பிரதமர் மோடி தொடர்ந்து அமைதியாகவே இருந்து வருகிறார். அக்கிரமகாரர்களை எதிர்க்க அவருக்கு தைரியம் இல்லை என்றும், அவருடைய கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும், சாகித்திய அகாதமி அமைதியாக உள்ளது... இவ்விவகாரத்தில் வருத்தமாக உள்ளது, என்று கூறிஉள்ளார். dailythanthi.com

கருத்துகள் இல்லை: