சனி, 10 அக்டோபர், 2015

900 கோடி ரூபாய் விஜய மல்லையா சுருட்டியது.....வங்கிகள் தாராளம்...சிபிஐ சோதனை.....

வங்கியில் 900 கோடி ரூபாய் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தாதது தொடர்பான வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். மதுபானத் தொழிலில் கொடி கட்டி பறந்த விஜய்மல்லையாவின் கிங்பிஷர் விமான நிறுவனம் கடன் சுமை காரணமாக விமான சேவையை கடந்த 2012ம் ஆண்டு நிறுத்தியது. பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கடன்களும் பைசல் செய்யப்படவில்லை. அந்த வகையில் கிங்பிஷர் நிறுவனத்திற்கு 900 கோடி ரூபாய் கடன் கொடுத்திருந்த ஐ.டி.பி.ஐ வங்கி, கடன் திரும்ப செலுத்தப்படாததால், பெரும் நஷ்டமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், மும்பை, கோவா, பெங்களூர், மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள மல்லையாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இவ்வழக்கில் கிங்பிஷர் இயக்குனரான மல்லையா, தலைமை நிதி அதிகாரி ரகுநாதன் மற்றும் வங்கியின் சில அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடன் வரம்பு தொடர்பான விதிமுறைகளை மீறி இந்த கடன் வழங்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள் மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: