வியாழன், 27 ஆகஸ்ட், 2015

ஆ.ராசா:மோடி ஜெயலலிதா சந்திப்பில் நிச்சயம் உள்நோக்கம் இருக்கிறது!

கூடலுார்: ''2ஜி வழக்கில் என்னை எதுவும் செய்து விட முடியாது,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா பேசினார். நீலகிரி மாவட்டம், கூடலுார் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் ராஜா பேசியதாவது: வரும் சட்டசபை தேர்தலில், கூடலுார் சட்டசபை தொகுதியில் நான் போட்டியிடுவதாக தகவல்கள் வருகின்றன. எதையும், தி.மு.க., தலைவர் கருணாநிதி முடிவு செய்வார்.கடந்த, 2013ல், என் உறவினர் வீடுகளில் சோதனை செய்த சி.பி.ஐ., அதிகாரிகள், 'ஒன்றுமில்லை' என தெரிவித்தனர். ஆனால், தற்போது என் மீது சொத்து குவிப்பு வழக்கை பதிவு செய்துள்ளனர். 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் என கூறியவர்கள், தற்போது, 27 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக கூறுகின்றனர். இதை சட்ட ரீதியாக சந்திப்பேன். பிரதமர், முதல்வர் சந்திப்பு சரியாக இருந்தாலும், அதில், நிச்சயம் உள்நோக்கம் உள்ளது. மத்திய அமைச்சர்களின் மீதான புகார் குறித்து, பிரதமர் மோடி வாய் திறப்பதில்லை.தினமலர்.com

கருத்துகள் இல்லை: