சனி, 29 ஆகஸ்ட், 2015

மீண்டும் ஜெயலலிதாவே ஆட்சி ! அ.தி.மு.க.வுக்கு 34.1% தி.மு.க.வுக்கு 32.6% ....கருத்து கணிப்பு!

 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக மக்கள் ஆய்வக இயக்குனர் தலைமையில்  கருத்து கணிப்பு ஒன்றை நடத்தபட்டது. தமிழகத்தின் 28 மாவட்டங்களில் 80 சட்டசபை தொகுதிகளில் கடந்த 13-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 3,370 பேரிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.இந்த கருத்து கணிப்பில் பேராசிரியர்கள் மாணவர்கள் என  400 பேர் இந்த பணியில் ஈடுபட்டனர். இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றால் அ.தி.மு.க.வுக்கு 34.1% பேர் வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் தி.மு.க.வுக்கு 32.6% பேர் வாக்களிப்போம் என கூறியுள்ளனர்.
தே.மு.தி.கவுக்கு 4% பேர் ஆதரவளித்துள்ளனர். பா.ம.கவுக்கு 3% பேர் ஆதரவைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் பாரதீய ஜனதா கட்சி 2.9% பேர் ஆதரவு பெற்று உள்ளது.  திமுகவில் இருக்கும் மிச்சம் மீதி திறமையாளர்களையும் ஸ்டாலின் ஓரங்கட்டி துரத்துவார்? பிரதான எதிர்க்கட்சியாகவாவது வருமா? ம்ம்ம்ம் என்னத்தை சொல்ல? 


சட்டசபைத் தேர்தலில் அதிமுக - பாஜக இடையே கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 37 சதவிகிதம் பேர் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். 23 சதவிகிதம் பேர் மறுக்க முடியாது என்றும், 9 சதவிகிதம் பேர் ஏதோ கொஞ்சம் நெருங்கி வருகிறது என்றும் 14 சதவிகிதம் பேர் வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க, தி.மு.க.விற்கு மாற்று கட்சி தமிழ்நாட்டில் கிடையாது என்று 53.4 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.

அடுத்த முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்ற கேள்விக்கு

ஜெயலலிதாவுக்கு  31.56% பேரும் ஸ்டாலினுக்கு 27.98% பேரும் ஆதரவு அளித்துள்ளனர். கருணாநிதிக்கு ஆதரவு 21.33% பேரும், விஜயகாந்துக்கு 6.24% பேரும், அன்பு மணி ராமதாசுக்கு 2.27 % பேரும்,வைகோவுக்கு 1.85% பேரும், சீமானுக்கு 1.84% பேரும்,திருமாவளவனுக்கு 1.13% பேரும், ஜி.கே வாசனுக்கு 1% பேரும் ஆதரவு அளித்து உள்ளனர். dailythanthi.com 

கருத்துகள் இல்லை: