சனி, 8 ஆகஸ்ட், 2015

பார்களுக்கு 'குட்பை': 500 'ரெஸ்டோ பார்'களை துவக்க தமிழக அரசு முடிவு

 முறைகேட்டை தடுக்க, 'டாஸ்மாக்' கடைகளில் உள்ள பார்களுக்கு பதில், 500 'ரெஸ்டோ பார்'களை துவக்க தமிழக அரசு, முடிவு செய்து உள்ளது.தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 6,800 மதுக்கடைகள் உள்ளன. இதில், 4,000 கடைகளில் அரசு அனுமதியுடனும்; மற்ற கடைகளில் முறைகேடாகவும் பார்கள் செயல்படுகின்றன. போலி மது விற்பனைஅரசு அனுமதியுடன் செயல்படும் பார்களில், போலி மது விற்பனை; உரிமத் தொகை செலுத்தாதது; கூடுதல் விலைக்கு மது, நொறுக்கு தீனி விற்பனை போன்ற முறைகேடுகள் நடக்கின்றன.இதனால், 'குடி'மகன்கள், மது அருந்த அதிகம் செலவிடுவதுடன், சமூக பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இதையடுத்து, 'டாஸ்மாக்' கடைகளில் உள்ள பார்களை மூடிவிட்டு, 'ரெஸ்டாரென்ட்' என்று அழைக்கப்படும் உணவகங்களில், 'ரெஸ்டோ பார்'களை துவக்க, அரசு முடிவு செய்துள்ளது.  "500 உணவகங்களில், 'ரெஸ்டோ பார்'களை துவக்க, அரசு முடிவு செய்துள்ளது" பார் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 10 லட்சம்..50 கோடி அள்ளீட்டாங்க ஒரே ஸ்ட்ரோக்கில்.. லஞ்சம் தான்..

இதுகுறித்து, 'டாஸ்மாக்' பொது மேலாளர் ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், நட்சத்திர ஓட்டல் - எப்.எல்., 3; கிளப் - எப்.எல்., 2; 'டாஸ்மாக்' கடை - எப்.எல்., 1 என்ற மூன்று
வகையான பார்கள் உள்ள ன. நோய் பாதிப்பு:'டாஸ்மாக்' கடைகளில் உள்ள பார்களில், 'சைட் டிஷ்' ஆக, சுண்டல், முட்டை, மீன், கோழி இறைச்சி உள்ளிட்டவை விற்கப்படுகின்றன. இவற்றின் விலை, மிகவும் அதிகம்; தரம் மோசம். இதனால், பலர் ஊறுகாய், சுண்டலை மட்டும் சாப்பிடு வதால், வயிற்று புண்,குடல் நோய் போன்றவற்றால் பாதிக்கின்றனர். கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களில், 'ரெஸ்டோ' பார்கள் உள்ளன. இவை, உணவகங்களில் நடத்தப்படுவதால், அங்கு குடும்பத்துடன், சாப்பிட வருவோர், மனைவி, குழந்தைகள் ஒப்புதலுடன் குறைந்த அளவில் மது அருந்துகின்றனர்.இதனால், பாதுகாப்பாக வீடு செல்ல முடியும். இதை பின்பற்றி, தமிழகத்தில் உள்ள, 500 உணவகங்களில், 'ரெஸ்டோ பார்'களை துவக்க, அரசு முடிவு செய்துள்ளது. பள்ளி, கல்லுாரி, வழிபாட்டு தலம், நெடுஞ்சாலைகளுக்கு அருகில் இல்லாத உணவகங்களில் மட்டும், 'ரெஸ்டோ பார்' துவக்க அனுமதி அளிக்கப்பட இருப்பதால், தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படாது. இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருப dinamalar.com

கருத்துகள் இல்லை: