ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

அருணாச்சல பிரதேசம் சென்றது சரியல்ல: பிரதமர் மோடிக்கு சீன அரசு கண்டனம்

பீஜிங்: அருணாச்சல பிரதேசத்தில், மக்கள் நல திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடியின் செயலுக்கு, சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், அது, இரு நாட்டு உறவுகளைப் பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான, அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை, தங்களுக்கே சொந்தமானது என, சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்தியாவிற்கு சொந்தமான இந்தப் பகுதிகளை, சீனா தன் வரைபடத்தில் இணைத்து வெளியிட்டு உள்ளதோடு, இந்தப் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் அவ்வப்போது ஊடுருவி, பிரச்னையையும் ஏற்படுத்தி வருகின்றனர்.தலாய்லாமாவின்  திபெத் அரசுக்கு நிலமும் கொடுத்து  அரசியல்  பொருளாதார  ஆதரவும் கொடுத்து  சீனாக்காரனின்  எரிச்சலை வாங்கினால் பதில் எரிச்சலும் வரும்தானே?  தலாய்லாமாவுக்கு வேறு இடமா கிடைக்கலை ? அந்த  பிரச்சனைக்கு ஏன் இந்தியா ஏன் அக்கறை?
இந்நிலையில், நேற்று முன்தினம் அருணாச்சல பிரதேச தலைநகர் இடாநகர் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநிலத்தின் நகர்லகனாலிருந்து, டில்லிக்கு புதிய ரயில் சேவையை துவக்கி வைத்தார். அத்துடன், புதிய மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதோடு, மக்கள் நல திட்டங்களையும் துவக்கி வைத்தார். மோடியின் இந்த செயலுக்கு, சீன அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்நாட்டு வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங் கூறியதாவது: இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணும் வரை, இந்திய தலைவர்கள் அருணாச்சல பிரதேசத்திற்குள் செல்வது சரியான செயல் அல்ல. அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய பகுதி குறித்து, இரு நாடுகளும் பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும். ஏற்கனவே, இந்திய தலைவர்களின் செயல்பாடுகளுக்கு சீனா பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்திய தலைவர்கள் அதை கண்டு கொள்ளாமல் செயல்படுவது, இரு நாடுகளிடையேயான பேச்சுவார்த்தையையும், உறவுகளையும் பாதிக்கும். இவ்வாறு, அவர் கூறினார். ஏற்கனவே, கடந்த ஆண்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அருணாச்சல பிரதேசம் சென்றதற்கு, சீனா கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மே மாதத்தில் பயணம்:

வரும் மே மாதத்தில், பிரதமர் மோடி சீனா செல்ல திட்டமிட்டுள்ளார். அப்போது, எல்லை பிரச்னை குறித்து இரு நாட்டு தலைவர்கள் பேச்சு நடத்த உள்ளனர். இந்நிலையில், மோடிக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமலர்.com

கருத்துகள் இல்லை: