தஞ்சை:முத்தப்
போட்டியை ஆதரிக்கும் குஷ்புவை தண்டிக்க வேண்டும் என்று கள் இயக்கம்
கூறியுள்ளது.கள் இயக்க தலைவரும், தமிழக விவசாயிகள் சங்க கூட்டமைப்பு
செயலாளருமான நல்லசாமி, தஞ்சையில் கூறியதாவது:காவிரியின் குறுக்கே கர்நாடகா
புதிய அணைகளை கட்டுவதை தடுத்து நிறுத்தும் பொறுப்பு, கடமை மத்திய அரசுக்கு
உண்டு. கள்ளுக்கான தடையை நீக்கி இனிக்கும் கள்ளையும், மணக்கும் கள்ளையும்
தமிழ் மக்களுக்கு கொடுக்கவும், ஏற்றுமதி செய்யவும் தமிழக அரசு முன்வர
வேண்டும். தமிழகத்தில் பனை, தென்னை மரங்களை காக்கும் விதத்தில் மதுவிலக்கு
மற்றும் மது கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்.
கரும்பு
கட்டுப்பாட்டு ஆணையை நீக்கி இந்தியாவில் உள்ள 560 சர்க்கரை ஆலைகளையும் கூலி
அரவை ஆலைகளாக மாற்ற வேண்டும். நடிகை குஷ்பு முத்தப்போட்டி நடத்துவதில்
என்ன தவறு என்று பகிரங்கமாக பேசி வருவது தமிழருடைய தன்மானத்துக்கு
விடுக்கும் சவால். குடும்ப வாழ்க்கையும் கூட்டு குடும்ப உறவும்
இந்தியாவில் நிலைத்திருக்க ஆளும் அரசும், வாழும் மக்களும், குஷ்பு
போன்றவர்களை கண்டிக்க வேண்டியதும், தண்டிக்க வேண்டியதும் காலத்தின்
கட்டாயம். இவ்வாறு நல்லசாமி கூறினார். - See more at:
tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக