ஞாயிறு, 7 டிசம்பர், 2014

Jayalalitha 110 விதியின்கீழ் அறிவித்த திட்டங்களுக்கு நிதி இல்லை! கைவிரித்த மோகன் வர்கீஸ் ,ஷீலா பாலக்ருஷ்ணன் ஜெயாவுக்கு......

மூன்றாண்டுகால  அ.தி.மு.க. ஆட்சியில் 5-வது முறையாக மாற்றப்பட்டிருக் கிறார் அரசின் தலைமைச் செயலாளர். புதிய தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் தேர்வு செய்யப்பட்டதற்கும் தலைமைச் செயலாளர்  பொறுப்பிலிருந்து மோகன் வர்கீஸ் மாற்றப்பட்டதற்கும் அரசின் ஆலோசகரும் முன் னாள் தலைமைச் செய லாளருமான ஷீலா பால கிருஷ்ணன்தான் காரணம் என்று கிசுகிசுத்தது கோட்டை வட்டாரம்.காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டு கூடுதல் விவரம் கேட்டோம். டிசம்பர் 1-ந் தேதி கோட் டையில் நடந்த ஆலோ சனைக் கூட்டம் பற்றிய தகவல்கள் மெல்ல மெல்ல வெளியே  வந்தன. முதல் வரும் நிதியமைச்சருமான ஓ.பி.எஸ் தலைமையில் நடந்த அந்த ஆலோசனைக் கூட் டத்தில் தலைமைச் செய லாளர் மோகன் வர்கீஸ், அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம், முதல்வரின் செயலாளர்கள் ராம் மோகன்ராவ், வெங்கட் ரமணன், நிதித்துறைச் செய லாளர் சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டார்கள். டிசம்பர்  4-ந் தேதி சட்ட மன்றக் கூட்டத்தொடரில் துணை நிதி நிலை அறிக்கை தாக்கல்  செய்யவேண்டியது குறித்தும், ஜெ. முதல்வராக இருந்தபோது 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக் கான நிதி ஒதுக்கீடு மற்றும் கூடுதல் நிதி ஒதுக்கீடு பற்றியும் ஆலோசனை நடந்தது.மாற்றத்துக்குக் காரணமான ஆலோசனைக் கூட்டம் 110 விதியின் கீழ் ஜெ. அறிவித்த 125 திட்டங்களுக்கு இதுவரை 15% நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதும், ஜெ.வின் பதவி பறிபோனதிலிருந்து கடந்த 2 மாதமாக எந்தப் பணிகளும் நடக்கவில்லை என்பதும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதைப் பேரவை யில் கிளப்ப ரெடியாக இருப்பது குறித்தும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. அப்போது, 110 விதியின்கீழ் ஜெ. அறிவித்த திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பான கோப்புகளில் கையெழுத்திடும்படி தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸுக்கு அறிவுறுத்தப்பட்டி ருக்கிறது. அவரோ, "நிதித்துறையில் நான் விவாதித்தவரை, நிதி நெருக்கடி அதிகமாக இருக்கிறது. அதனால் திட்டங்களுக்கு நிதியை அறிவித்துவிட்டு ஒதுக்க முடியாமல் போய்விடும். எனவே, 110விதியின்கீழ் வெளி யிட்ட பல  அறிவிப்புகளை ரத்துசெய்துவிட லாம்' என்றிருக்கிறார்.
முதல்வர்  உள்பட அங்கிருந்தவர்கள் தலைமைச்செயலாளரின் பதிலால் ஜெர்க் ஆகிவிட்டனர்.


ஃபைல்களைத் தள்ளிய மோகன் வர்கீஸ்


அரசின் ஆலோசகராகவும் முதல்வரை விட சூப்பர் பவராகவும் கோட்டையில்  கொடிகட்டிப் பறக்கும் ஷீலாபாலகிருஷ்ணன், ""ஜெ. மேடம் அறிவிச்ச திட்டங்களைக் கிடப்பிலே போட முடியாது. நிதி விஷயங் களை நாங்க பார்த்துக்குறோம். நீங்க கையெழுத்துப் போடுங்க'' என்று தலைமைச் செயலாளரை நோக்கி அதிகாரத்துடன் சொல்லியுள்ளார். மோகன் வர்கீஸோ, ""மேடத்தை சந்திக்க ஏற்பாடு செய்யுங்க. நான் அவங்ககிட்டேயே  விளக்கிக்குறேன்''’என்று சொன்னதும் ஷீலாவின் கோபம் அதிகமாகி விட்டது. ""மேடத்தையெல்லாம் நீங்க சந்திக்க முடியாது. நாங்க  சொல்றதை செய்யுங்க. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி  கேட்டால் பதில்  சொல்லப் போறது முதல்வர்தான், நீங்க கிடையாது. ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தாதீங்க'' ஷீலா நேரடியாகவே  வெடிக்க, அப்போதும் வர்கீஸ், ""என்னால் இது முடியாது. ஸாரி..'' என்றபடி மேஜையி லிருந்த ஃபைல்களை வேறு பக்கமாகத் தள்ளிவிட்டு, சீட்டிலிருந்து வெளியேறி விட்டார் என்று விளக்கமாகவே கிசுகிசுத்தது கோட்டை  வட்டாரம்.

மோகன் வர்கீஸ் சுங்கத்தின் இந்தச் செயல் ஓ.பி.எஸ், ஷீலாபால கிருஷ்ணன் என அங்கிருந்த அனை வரையும் அதிரவைக்கவே, விஷயம் படுஸ்பீடில் கார்டன் வரை சென்றது. அதன் உடனடி எஃபெக்ட்தான் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்த மறுநாள் (டிச.2) அன்று மோகன்வர்கீஸ் சுங்கத் இடமாற்றம்  செய்யப்பட்டு புதிய தலைமைச் செயலாளரானார் ஞான தேசிகன் என்றும் கோட்டை வட்டாரம் ...  nakkheeran.in

கருத்துகள் இல்லை: