புதுடில்லி : ''கிரிக்கெட் விளையாட்டுக்கு கொடுக்கும்
முக்கியத்துவத்தை மற்ற கிராமப்புற விளையாட்டுகளுக்கு கொடுக்க மறுப்பது
ஏன்?'' என, பா.ஜ., எம்.பி., வீரேந்திர சிங் எழுப்பிய கேள்வியால்,
லோக்சபாவில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.உ.பி., மாநிலம் பதோகி லோக்சபா தொகுதியிலிருந்து பா.ஜ., சார்பில் தேர்வு செய்யப்பட்ட, வீரேந்திர சிங் நேற்று பேசியதாவது:
நம்
நாட்டில் கிரிக்கெட்டுக்கு மட்டும் தான், அதிக முக்கியத்துவம்
தரப்படுகிறது; மற்ற விளையாட்டுகளுக்கு குறிப்பாக, கிராமப்புற
விளையாட்டுகளுக்கு முக்கியத்துவமோ, போதிய நிதி உதவியோ தரப்படுவது இல்லை.
கிராமப்புற விளையாட்டுகள் புறக்கணிக்கப்படுகின்றன.தங்களுக்கு கிடைக்கும்
அளவுக்கு அதிகமான புகழ் மற்றும் பணத்தால், கிரிக்கெட் வீரர்கள் தங்களை
கடவுளாக நினைக்கின்றனர். மற்ற விளையாட்டு வீரர்கள், அவர்களின் சேவகர்களாக
நடத்தப்படுகின்றனர். கிரிக்கெட் போல மற்றவற்றில் சூதாட்டம் அவ்வளவு எளிதல்ல. கிரிக்கெட்டில்
மட்டும்தான் அதனை நடத்தும் வாரியமே அரசு நிறுவனமில்லை அல்லது அரசின்
கட்டுபாட்டில் இல்லை. எனவே போர்டு பதவியிலிருப்பவர்களே ஜாலியாக பல்லாயிரம்
கோடி சூதாட்டம் மூலம் சம்பாதிக்கின்றனர்.ரசிகர்களைக் கவர ஆபாச நடனம் வேறு
இதற்கு ஒரே தீர்வு கிரிகெட்டை விளையாட்டே இல்லை சினிமா போல பொழுதுபோக்கு என
அறிவித்து கேளிக்கை வரி விதிக்கவேண்டும் அந்த வரியைக் கொண்டு மற்ற
விளையாட்டுக்களை வளர்க்கலாம்
நானும், மல்யுத்த விளையாட்டு வீரன் தான். முலாயம் சிங் யாதவ் கூட, மல்யுத்த வீரராக இருந்தவர் தான். கிரிக்கெட்டை எதிர்க்கவில்லை; அனைத்து விளையாட்டுகளையும், கிரிக்கெட்டுக்கு சமமாக பாவிக்க வேண்டும் என்று தான் கூறுகிறேன்.
விளையாட்டு துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் கூறுகையில், ''அனைத்து விளையாட்டுகளுக்கும் அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. திறமையான விளையாட்டு வீரர்கள், நாட்டின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும், அவர்களை கண்டறிந்து, அவர்களின் திறமையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' என்றார். dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக