ஞாயிறு, 7 டிசம்பர், 2014

ஜெயலலிதா ஜாமீன் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது! உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி HL Dattu மீது டிராபிக் ராமசாமி ஜனாதிபதியிடம் புகார்!


சென்னை: சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கிய விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது சமூக ஆர்வலர்  டிராபிக் ராமசாமி நேற்று ஜனாதிபதியிடம் புகார் அளித்துள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்தா கவுடா  ஆகியோரிடம் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நேற்று கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கர்நாடக  உயர் நீதிமன்றம் ஜாமீன் தர மறுத்தது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி  ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து அடங்கிய டிவிஷன் பெஞ்ச் ஜாமீன் வழங்கியது. ஜாமீன் உத்தரவில் விளக்கமாக  குறிப்பிடாமல் ஒரு வரியில் தலைமை நீதிபதி உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியுள்ளார். பொதுவாக அப்பீல் செய்யும் போது, வழக்கு விசாரணை  நீதிமன்றத்தில் அபராத தொகையை செலுத்தியிருக்க வேண்டும். மேலும், ஜாமீன் கொடுக்கும் போது எந்த நிபந்தனையும் விதிக்காமல் ஜாமீன்  வழங்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Plot allotment row casts shadow on new CJI
A two-decade-old controversy over housing society plot allotments to some of the most prominent members of the Indian judiciary has become relevant once again as Supreme Court judge HL Dattu assumed the most powerful judicial office in the country on Sunday.
New Chief Justice of India Justice Dattu, and two of his Supreme Court colleagues – TS Thakur and V Gopala Gowda – are among the judges who accepted the plots in defiance of a 1995 ruling by the Karnataka high court that judges were ineligible to participate in the land scheme.  hindustantimes.com


மேலும் ஜெயலலிதா தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி விசாரிக்க கூடாது. ஜாமீன் வழங்கியதில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக விசாரணை நடத்த ஒரு குழுவை அமைக்க வேண்டும். அந்த குழு விசாரித்து முடிவு அறிவிக்கும் வரை அவர் தலைமை நீதிபதியாக செயல்படக் கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவின் ஒரு நகல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அனுப்பியுள்ளதாக டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். வரும் திங்கட்கிழமை(8ம்தேதி) இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் வழக்காக தொடுக்க உள்ளதாகவும் டிராபிக் ராமசாமியின் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார் dinakaran.com

கருத்துகள் இல்லை: