செவ்வாய், 9 டிசம்பர், 2014

அதிமுக செலவு ரூ.32,19,48,396. வேட்பாளர்கள் செலவு தனி ! தேர்தலை சந்திக்க இவ்வளவு கரன்சியை அதிமுக எங்கிருந்து???

அடுத்து, ஜெயலலிதாவின் ஆகாய செலவுகள். ஜெர்ரி ஜான் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தில் இருந்துதான் ஹெலிகாப்டரை ஜெயலலிதாவுக்காக வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள். ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்த வகையில் ஹெலிகாப்டர் நிறுவனத்துக்கு ரூ.5.50 கோடி வழங்கப்பட்டிருக்கிறது.  ஏரோ ஏர்கிராஃப்ட், நவயுகா இன்ஜினீயரிங் ஆகிய நிறுவனங்களில் இருந்து விமானங்கள் ரூ.2.08 கோடிக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டு இருக்கிறது. 34 இடங்களில் ஹெலிகாப்டர் இறங்குதளம் (ஹெலிபேடு) அமைக்கப்பட்ட வகையில் ரூ.5.80 கோடி ரூபாய் செலவானது. அதாவது, ஹெலிகாப்டர் விமானம் மற்றும் ஹெலிபேடு செலவுக்கு மட்டும் மொத்தமாக ரூ.13.39 கோடி செலவழித்து இருக்கிறது
அ.தி.மு.க. இதுதவிர, ஹெலிபேடில் இருந்து பொதுக்கூட்ட மேடைக்கு வருவதற்காக ஜெயலலிதா பயன்படுத்திய டெம்போ வேனுக்கு ரூ.2.46 லட்சம் செலவு.  
தேர்தல் பிரசாரத்தை ஊடகங்கள் வழியாகவும் அ.தி.மு.க மேற்கொண்டது. டி.வி சேனல்களில் மேற்கொண்ட பிரசாரத்துக்கு ரூ.12.57 கோடியும் எஸ்.எம்.எஸ் மூலம் நடந்த பிரசாரத்துக்கு ரூ.1.26 கோடியும் மொபைல் வேன், ரேடியோ, இணையதளம் மற்றும் மின்னணு விளம்பரம் ஆகியவற்றுக்காக ரூபாய் ஒரு கோடியும் செலவழித்தார்கள். ஊடகங்கள் வழியாகப் பிரசாரம் மேற்கொண்ட வகையில் மட்டும் மொத்தமாக 14.97 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளது. போஸ்டர்கள் 2.42 கோடி ரூபாய்க்கு அச்சடிக்கப்பட்டன.
40 தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்தார் ஜெயலலிதா. இதற்காக பந்தல், மேடை, மைக்செட் ஆகியவை அமைக்கப்பட்டன. இதற்கான செலவுகளையும் பார்ப்போம். மொத்தமாக 35 இடங்களில் ஜெயலலிதா பேசினார். இந்த பொதுக் கூட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் சராசரியாக ஒரு லட்சம் வரை ஆடியோ சிஸ்டத்துக்கு செலவழித்து இருக்கிறார்கள். மொத்தமாக 35 கூட்டங்களுக்கும் ஆடியோ சிஸ்டத்துக்கு ரூ.36.30 லட்சம் செலவானது. மேடை அமைத்த வகையில் ரூ.47.14 லட்சமும் மேடையில் ஜெயலலிதாவுக்கு தற்காலிக ஏஸி வசதி செய்து கொடுப்பதற்காக ரூ.6.30 லட்சமும் செலவழிக்கப்பட்டன. ஒரு மேடை அமைக்க ஆன சராசரி செலவு ஒரு லட்சத்து 39 ஆயிரம் ரூபாய்.
வேட்பாளர்கள் செய்த செலவுகள் சேர்க்காமல் அ.தி.மு.க தலைமை ஒட்டுமொத்தமாக செலவழித்த தொகை மொத்தம் ரூ.32,19,48,396.
தலைசுத்துதா?  

தேர்தல் செலவுகள் என்னென்ன?
ஸ்டார் பேச்சாளர்கள் - 45,91,000
ஹெலிகாப்டர் வாடகை - 5,50,01,344
விமானங்கள் வாடகை -  2,08,31,034
டெம்போ டிராவலர் - 2,46,088
டி.வி பிரசார விளம்பரங்கள் -  12,57,13,140
மொபைல் வேன் பிரசாரம் - 33,70,800
ரேடியோ விளம்பரம் -  46,26,929
இணையதள விளம்பரம் - 19,21,630
மின்னணு விளம்பரம் - 15,16,860
எஸ்.எம்.எஸ் விளம்பரம் - 1,26,34,880
தேர்தல் அறிக்கை - 2,26,800
போஸ்டர்கள் - 2,42,23,100
ஹெலிபேடு - 5,80,70,223
ஆடியோ சிஸ்டம் - 36,30,000
மேடை அமைத்தல் - 47,14,046
தற்காலிக ஏஸி வசதி - 6,30,522
மொத்தம் - ரூ. 32,19,48,396
படம்: எல்.ராஜேந்திரன்
விகடன்.com

கருத்துகள் இல்லை: