புதன், 10 டிசம்பர், 2014

BJP நிர்மலா சீதாராமன் (அய்யங்கார்) தமிழக முதலமைச்சர் வேட்பாளராகிறார்?

தமிழகத்தில், 2016ல் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில், செயல்பட்டுக் கொண்டிருக்கும் பா.ஜ., தலைமை, கட்சியின் முதல்வர் வேட்பாளராக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, களம் இறக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக, பிரதமர் மோடியின் ஒப்புதலுடன், கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, கட்சியின் முக்கியத் தலைவர்களிடம் பேசி, கருத்துக்களைப் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், பா.ஜ., ஆட்சியை ஏற்படுத்த, திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.அதற்கேற்ற வகையிலேயே, மத்திய அரசின் ஒவ்வொரு செயல்பாடும் இருக்கிறது. அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும், ஒவ்வொரு மாநில மக்களையும் குறிவைத்தே செய்யப்படுகிறது.தமிழர்களுக்கு இருக்கும் பிரதான பிரச்னைகள் அனைத்தையும், விரைந்து தீர்க்கும் முயற்சியில், தற்போது மத்திய அரசு இறங்கி செயல்பட்டுக் கொண்டிருப்பது, அந்த வகையில் தான். A Tamil Iyengar Brahmin from Trichirapalli, Nirmala is the daughter of Narayanan Sitaraman, a railway employee, and Savitri. She graduated in economics from Seethalakshmi Ramaswami college in Trichi before she headed to JNU to do her master's and doctorate in economics. Parakala, a Telugu Brahmin from Narsapur in coastal Andhra, is the son of Seshavataram, a veteran communist who later gravitated to the Congress and served as a five time minister in AP. Parakala could not pursue politics successfully in the footsteps of his father and joined JNU to study economics. தினமலர் ஆசைப்படுதாக


அறிக்கை: தேசிய அளவில், கட்சிக்குள்ளேயே, உத்திகள் வகுக்கும் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அந்த குழு, ஒவ்வொரு மாநில மக்களின் பிரச்னைகள், தேவைகள் குறித்து அறிந்து, அதை சீர்படுத்தும் தீர்வோடு, பா.ஜ., மேலிடத்துக்கு, தொடர்ச்சியாக அறிக்கைகளையும், கருத்துக்களையும் கொடுக்கிறது.அவர்கள் வகுத்துக் கொடுத்த திட்டங்களின் அடிப்படையில் தான், தமிழக மீனவர்களுக்கான பிரச்னைகளை தீர்க்க, மத்திய அரசு எடுக்கும் முயற்சிகள் உள்ளன.இலங்கை கடல் பகுதியில், தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை நிரந்தரமாக துடைப்பது, திருவள்ளுவர், பாரதியாருக்கு புகழாரம் சூட்டுவது போன்றவையெல்லாம் கூட, உத்திகள் குழு வகுத்துக் கொடுத்தவை தான்.தமிழகத்தின், பொருளாதார மேம்பாடு உட்பட, பல விஷயங்களை, அடுத்தடுத்து நிறைவேற்ற, உத்திகள் வகுக்கும் குழு, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவிடம் கொடுத்திருக்கிறது. அவைகளை வரிசையாக செயல்படுத்தும் போது, தமிழகம் பா.ஜ., பின்னால் அணிவகுக்கும் என்பது, அவர்கள் திட்டம்.

யோசனை:இதற்கிடையில், தமிழகத்தில், பெண் ஒருவரை பா.ஜ., முதல்வர் வேட்பாளராக்கவும், பா.ஜ., உத்திகள் குழு, அமித் ஷாவுக்கு யோசனை கூறியுள்ளது. குறிப்பாக, மத்திய வர்த்தகத் துறை அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனை, தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என்றும், ஆலோசனை கூறியுள்ளது.இதனால், தமிழக பா.ஜ., சார்பில், நிர்மலா சீதாராமன், முதல்வர் வேட்பாளராக, விரைவில் அறிவிக்கப்படுவார் என, தெரிகிறது.இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்களில் கூறியதாவது;தமிழகத்தை சொந்த மாநிலமாக கொண்ட, பச்சைத் தமிழரான நிர்மலாசீதாராமன், நன்கு படித்தவர்; பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர். அதனால் தான் அவரை, தெலுங்கானாவில் இருந்து, ராஜ்யசபா எம்.பி.,யாக்கி, மோடி, தன் அமைச்சரவையில், தனிப் பொறுப்புடன் வர்த்தகத் துறைக்கு அமைச்சராக்கினார்.தொழில் - வர்த்தகத் துறையில், மோடி எதிர்ப்பார்ப்புக்கும் கூடுதலாக, செயல்பட்டு வரும் நிர்மலா சீதாராமனை, தமிழக பா.ஜ.,வில் அனைவரும் ஏற்றுக் கொள்வர்.அதனால், அவரை தமிழக பா.ஜ., முதல்வர் வேட்பாளராக்க, மேலிடத்தில் முடிவெடுத்து விட்டனர். 20ம் தேதி, சென்னைக்கு வரும் அமித் ஷா, இதுகுறித்து, இங்கிருக்கும் தலைவர்களிடம் ஆலோசிப்பார்.அதன்பின், அடுத்த ஆண்டு மத்தியில், 2016 சட்டசபைத் தேர்தலுக்கான பணிகள் வேகமெடுக்கும் நிலையில், மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து, நிர்மலா சீதாராமன் விடுவிக்கப்பட்டு, களம் இறக்கிவிடப்படுவார். இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரி வித்தனர்.

தமிழகத்தை சேர்ந்தமத்திய அமைச்சர்
பெயர்: நிர்மலா சீதாராமன், 55
தந்தை:நாராயண சீதாராமன்
தாய்: சாவித்ரி
பிறந்த ஊர்:மதுரை, தமிழகம்
பிறந்த தேதி:18.08.1959
மண நாள்: 12.09.86
கணவர்: டாக்டர் பரக்கல பிரபாகர்
வாரிசு: மகள்
படிப்பு: எம்.ஏ., எம்.பில்.,
கல்லூரி: சீதாலட்சுமி ராமசாமி கல்லுாரி,திருச்சி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், டில்லி
தொழில்: பொருளாதார நிபுணர், அரசியல்வாதி, சமூக ஆர்வலர்
கணவர் ஊர்: ராஜேந்திரா நகர் மண்டல், ரங்கா ரெட்டி மாவட்டம், தெலுங்கானா
வகித்த பொறுப்பு:2003 - 05, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்
கட்சிப் பொறுப்பு: 2008 முதல், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர், அமைச்சராகும் வரை கட்சியின்செய்தி தொடர்பாளர்
எம்.பி.,:தெலுங்கானா மாநிலத்தில் இருந்து, ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டவர்
அமைச்சர்: வர்த்தகம், தொழில் (தனிப் பொறுப்பு),நிதி - கம்பெனி விவகாரங்கள் இணை அமைச்சர்

- நமது நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை: