சென்னை: நாடு முழுவதும் நேற்று தேசிய, 'லோக் அதாலத்' நடந்தது.
தமிழகத்தில், சாதனை நிகழ்வாக, 14.93 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு
காணப்பட்டு, பயனாளிகளுக்கு தீர்வுத் தொகையாக, 1,390 கோடி ரூபாய், 'பைசல்'
செய்யப்பட்டது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், நாடு
முழுவதும், தமிழகத்தில், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவுடன்
இணைந்து ஆண்டுதோறும், தேசிய, 'லோக் அதாலத்' நிகழ்ச்சி நடத்தப்பட்டு
வருகிறது. கடந்த, 2013ல், 13.77 லட்சம்
வழக்குகளுக்கு, சமரச தீர்வு காணப்பட்டது; பயனாளிகளுக்கு தீர்வுத் தொகையாக,
1,140 கோடி ரூபாய் பெற்றுத் தரப்பட்டது.நடப்பு ஆண்டில், நேற்று, தேசிய,
'லோக் அதாலத்' நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தில் இந்த நிகழ்ச்சியில், 14
லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.
11 சிறப்பு அமர்வு: சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்த நிகழ்ச்சி, காலை, 10:00 மணிக்கு துவங்கியது. உச்ச நீதிமன்ற நீதிபதியும், தேசிய சட்டப்பணி ஆணைக் குழு தலைவருமான தாகூர், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் துவக்கிவைத்தார்.சென்னை உயர் நீதிமன்றத்தில், 11 நீதிபதிகள் தலைமையில், 11 சிறப்பு அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஓய்வுபெற்ற மாவட்ட< நீதிபதி, வழக்கறிஞர் இடம் பெற்றனர். தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பார்வையிட்டார்.தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு, இழப்பீடு வழங்க, 16 வங்கிகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில், நேற்று ஒரே நாளில், 14.93 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில், பயனாளிகளுக்கு தீர்வுத் தொகையாக, 1,390 கோடி ரூபாய், 'பைசல்' செய்யப்பட்டது.
300 அமர்வுகள்: தமிழகத்தில், முதன் முறையாக நிலுவையில் இருந்த, வழக்குகளை விசாரிக்க மாநிலம் முழுவதும், 300 அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில், 400 நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள், இதுதவிர, மத்திய அரசு ஊழியர்களின் பணி பிரச்னைகள், ஓய்வூதிய பிரச்னைகள், வருவாய் துறையின் நிலத் தீர்வை பிரச்னைகள், நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படாத வங்கிக்கடன் பிரச்னைகள், 300 தொலைபேசி வழக்குகள், வராக்கடன் வசூல் தீர்ப்பாயம் மற்றும் தீர்ப்பாய மேல்முறையீட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக