வெள்ளி, 12 டிசம்பர், 2014

முஷராப் : இந்தியாவை பழிவாங்கவே கார்கில் படையெடுப்பு! பங்களாதேஷ் உருவாக்கத்தில் இந்தியாவின் .......

கராச்சி: வங்கதேசம் உருவாக்கத்தில், இந்தியாவின் பங்களிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே கார்கில் போர் நடைபெற்றது. அனைத்து முனைகளிலும், பழிக்கு பழி கொள்கையில் தான் உறுதியாக இருந்ததாக, பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ தளபதி பர்வேஷ் முஷாரப் கொக்கரித்துள்ளார். கடந்த 1999ல், இந்தியா-பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடந்தது. இதற்கு, முக்கிய மூளையாக செயல்பட்டவர், பாகிஸ்தானின் அப்போதைய ராணுவ தளபதியாக இருந்த முஷாரப். பாகிஸ்தானை 9 ஆண்டு காலம் ஆட்சி செய்த இவர், தற்போது, தேசத்துரோக குற்றத்திற்கான வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.
பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த முஷாரப், மேலும் கூறியதாவது: வங்கதேச உருவாக்கத்தில், இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது. அதேபோன்று, சியாச்சினை கைப்பற்றவும் இந்தியா முயற்சி மேற்கொண்டது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பழிதீர்க்கும் விதமாகவே, கார்கில் போர் நடத்தப்பட்டது.  இந்தாளுக்கு தமிழ்நாட்டு அரசியல் அத்துப்படின்னு நினைக்கிறேன். நம்ம அரசியல்வாதி போலவே பேசுறாரு. இப்படி பீலா விட்டால் திரும்பவும் அங்கே ஆட்சி நாற்காலியில் உட்காரலாம் என நினைப்பு.
அம்மா அப்பா வெச்ச பரமேஸ்வரன்குற பேர் பர்வேஷ் ன்னு மாத்தி வெச்சுகிட்டு லோலாயிதனத்த பாருங்க
ஏனென்றால், நான் எப்பொழுதும் பழிக்குப்பழி கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். இந்தியா நட்புகரம் நீட்டி ஒருபடி முன்னே வந்தால், பாகிஸ்தான் இரண்டு படிகள் முன்னே வர தயாராக உள்ளது. இந்தியாவுடன் நட்பு பாராட்ட நான் விரும்பவில்லை என மக்கள் நினைக்கின்றனர். ஆனால், அது தவறானது. நான் பதவியில் இருந்த காலத்தில், இந்தியாவுடன் நட்புறவு இருந்தது. அதேசமயம், இருநாடுகளும் பரஸ்பரம் மதித்து நடக்கின்ற போதுதான் அந்த நட்புறவு சாத்தியப்படும். மோடி பிரதமராக இருக்கும் இந்த நேரத்திலும், இந்தியாவுடன் நட்பு வைத்து கொள்ள முடியும். ஆனால், அடி பணிந்து நடக்க முடியாது. இந்தியா தொடர்ந்து, ஆக்ரோஷமான தாக்குதலில் ஈடுபட்டாலும், மறைமுக போர் தொடுத்தாலும், நாமும் அதே பாணியில்தான் பதிலளிக்க முடியும். இவ்வாறு, முஷாரப் கொக்கரித்துள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை: