ஞாயிறு, 7 டிசம்பர், 2014

கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடசலபதி கிளை (BRANCH) கோவில் கட்டுமானம்

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.22.50 கோடி செலவில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கட்டுமானப் பணி ஞாயிற்றுக்கிழமை (டிச.7) தொடங்குகிறது.
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் 2010-ஆம் ஆண்டு பிப்பவரி 28-ஆம் தேதி ஸ்ரீநிவாச கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர்.
இதைத் தொடர்ந்து, திருக்கல்யாணம் நடைபெற்ற பகுதியில் திருப்பதியில் இருப்பதைப் போன்று கோயில் அமைக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.
கோயில் கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை விவேகானந்த கேந்திரம் தானமாக வழங்கியதைத் தொடர்ந்து, 2013-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி பூமிபூஜை நடத்தப்பட்டது. கோயில் கட்டுவதற்கான அரசின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தன.திருப்பதி கோவில் நல்ல வசூல் தரும் கோவிலாகும் மேலும் பலர் பிரான்சைஸ் முறையில் பல இடத்திலும் ஆரம்பிக்கலாம்  prearyan.blogspot.com/2010/03/tirupati-balaji-is-jain-temple-of.html

இந்த நிலையில், கோயில் கட்டுமானப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (டிச.7) தொடங்குகின்றன.
வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, பத்மாவதி தாயார், கருட பகவான் சன்னதிகள், தங்கக் கொடிமரம், தங்கக் கோபுரம், தெப்பக்குளம், கல்யாண மண்டபம், முடி காணிக்கை செலுத்தும் இடம், சமையல் அறை உள்ளிட்ட அனைத்தும் இங்கு இடம் பெறும்.
திருப்பதியில் நடப்பதைப் போன்று நாள்தோறும் பூஜைகள், வழிபாடுகள், திருவிழாக்கள் நடத்தப்பட உள்ளதால் கன்னியாகுமரிக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு உயரும் என பக்தர்கள் தெரிவித்தனர்.
முழுக் கட்டுமானப் பணிகளும் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் நிறைவடைந்து விடும் என சென்னையில் உள்ள உள்ளூர் திருப்பதி தேவஸ்தான கமிட்டி அதிகாரிகள் தெரிவித்தனர். dinamani.com

கருத்துகள் இல்லை: