வெள்ளி, 31 ஜனவரி, 2014

சேலம்: ஸ்கை டைவிங் பயிற்சியில் பெண் பலி ! பாராசூட் விரியவில்லை. -

சேலம்:சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காமலாபுரத்தில் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து சென்னைக்கு விமானம் இயக்கப்பட்டது. போதிய பயணிகள் வராததால் நஷ்டம் ஏற்பட்டதை தொடர்ந்து, விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த விமான நிலையத்தில் கலெக்டர் அனுமதியுடன் டெல்லியை சேர்ந்த இந்தியா ஸ்கை டைவிங் பாராசூட் அசோசியேஷன் சார்பில், சிறிய வகை விமானத்தில் இருந்து பாராசூட் கட்டிக் கொண்டு குதிக்கும் பயிற்சி (ஸ்கை டைவிங்) கடந்த 24ம் தேதி துவங்கியது. இதில் பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வினோத் (28), அவரது மனைவி ரம்யா (26) உள்ளிட்ட 11 பேர் பயிற்சி பெற்று வந்தனர்.
நேற்று காலை 11 மணியளவில் வினோத்தும், ரம்யாவும் பயிற்சிக்கு சென்றனர். ரம்யாவுடன் பயிற்சியாளர்கள் மோகன்ராவ், ஆஷ் ஆகியோர் விமானத்தில் சென்றனர். சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் பறந்த போது, பாராசூட் கட்டிக் கொண்டு ரம்யா குதித்தார். அப்போது, பாராசூட் விரியாததால், பொட்டையாபுரம் என்னுமிடத்தில் காட்டுப் பகுதியில் அவர் கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தால், உடனடியாக பயிற்சி நிறுத்தப்பட்டது. பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால், உடனடியாக பயிற்சி நிறுத்தப்பட்டது.
பயிற்சியின் போது ரம்யாவுடன் சென்ற அவரது கணவர் வினோத் கூறுகையில், ``நானும், எனது மனைவியும் பயிற்சிக்கு சென்றோம். விமானம் சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தை எட்டியதும், முதலில் எனது மனைவியை குதிக்கும்படி பயிற்சியாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ரம்யா விமானத்தில் இருந்து குதித்தார். அப்படி குதிக்கும் போது, சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் பாராசூட் முழுமையாக விரிய வேண்டும். ஆனால், அந்த பாராசூட் விரியவில்லை. ரம்யா, பாராசூட்டை விரிவடைய செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் காற்று பலமாக வீசியதால், பாராசூட் விரிவடைவதற்கு பதிலாக அவரது உடலை சுற்றிக் கொண்டது. இதனால் அவர் கீழே விழுந்து இறந்து விட்டார். பயிற்சியின் போது விபத்து நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிவிக்க வயர்லெஸ் கருவி கொடுக்கப்பட்டுள்ளது. தன்னிடம் இருந்த வயர்லெஸ் மூலம் பயிற்சியாளர்களுடன் ரம்யா தொடர்பு கொண்டார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. விபத்து நடந்த போது அந்த இடத்தில் பயிற்சியாளர்களோ, பயிற்சி நிறுவனத்தை சேர்ந்தவர்களோ இல்லை`` என்றார்.

இந்த விபத்து தொடர்பாக இந்தியன் ஸ்கை டைவிங் அசோசியேஷனை சேர்ந்த பயிற்சி நடத்துனர்கள் மதுரை திருநகர் நாகேஷ் (42), புதுடெல்லி கிருஷ்ணா நகர் அங்கீதா (28), பயிற்சியாளர்கள் விசாகப்பட்டணம் மோகன் ராவ் (38), ராஜஸ்தான் ஐஸ்வர்ய யாதவ் (33) ஆகிய 4 பேரை ஓமலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.<.tamilmurasu.org/

கருத்துகள் இல்லை: