ஞாயிறு, 18 நவம்பர், 2012

Bal Thakare தீராத சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர்


   சிவசேனா கட்சியின் தலைவரும் அதன் நிறுவனருமான பால்தாக்கரே காலமானார். 17.11.2012 மதியம் 3.33 மணிக்கு மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்துள்ளது என பால்தாக்கரேவின் தனி மருத்துவரான ஜலில் பார்க்கர் அறிவித்துள்ளார். கடந்த இருவார காலமாகவே பால்தாக்கரே உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்தார். மும்பையைச் சேர்ந்த லீலாவதி மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தின்போது, சிவசேனா கட்சியின் சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில்தான் பால்தாக்கரே முதன் முதலாக பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக பதிவு செய்யப்பட்ட அவரது வீடியோ பேச்சு வெளியானது. அதில் அவர் தனது உடல் நிலையைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். நான் தளர்ந்துவிட்டேன். இனி என்னால் நடக்கவோ, பேசவோ முடியாத நிலையில் இருக்கிறேன். சிவசேனா கட்சியினர்  எனது மகனுக்கும், பேரனுக்கும் ஆதரவு தரவேண்டும் என்று ஒரு சிறிய உரை வெளியானது. அப்போதுதான் கட்சித் தொண்டர்கள் பால்தாக்கரே உடல்நலக் குறைவால் உள்ளார் என்று தெரிந்துகொண்டனர்.  http://www.nakkheeran.in

 பால்தாக்கரே பொதுவாக போராட்டக்காரராக அறியப்பட்டவர். அவரது அரசியல் வாழ்க்கை மிகவும் பரபரப்புடன்தான் தொடங்கியது. 1926ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி புனேவில் பிறந்த பால்தாக்கரே, கார்டூனிஸ்ட்டாக ஆக வேண்டும் என்று விரும்பியர். இதற்காகவே புனேவில் இருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தவர். பால்தாக்கரேவின் தந்தையான கேஷவ் தாக்கரே, மராட்டிய மண் மராட்டியர்களுக்கு மட்டுமே என்ற முழக்கத்தை முன் நிறுத்தியவர். 1950களில் இதற்கான போராட்டங்களில் கேஷவ் தாக்கரே ஈடுபட்டார். இதற்காக சம்புக்தா மஹாராஷ்டிரா சல்வால் என்ற அமைப்பை தொடங்கினார். மஹாராஷ்டிரா மராட்டியர்களுக்கு மட்டுமே என்று குரல் கொடுத்து கைது செய்யப்பட்டார். அவரும் கார்டூனிஸ்டாக பத்திரிகையில் பணிபுரிந்தவர்.தந்தையின் போராட்டத்தை பால்தாக்கரே தொடர்ந்தார். இதற்காக 1960ஆம் ஆண்டில் மார்பிக் என்ற பத்திரிகையை தொடங்கினார். இந்த பத்திரிகையின் மூலமாக தங்களது கொள்கைகளை பரப்பினார். 1966ஆம் வருடம் ஜூன் மாதம் 19ஆம் தேதி அவர் மஹாராஷ்டிர மாநிலத்தின் பிறப்புரிமையாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் நோக்கத்துடன் சிவசேனாவைத் துவங்கினார். பால்தாக்கரே தேர்த-ல் போட்டியிட்டதில்லை. எந்த பதவியிலும் அவர் அமர்ந்திருந்ததும் இல்லை. >1995ஆம் ஆண்டு பாஜக சிவசேனா கூட்டணி ஏற்பட்டு சட்டசபை தேர்தல்களில் வெற்றி அடைந்தது. 1995ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசிய பேச்சுகளுக்காக அவர் வாக்களிக்கவும், தேர்தல்களில் பங்கேற்கவும் தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. 6 ஆண்டுகளுக்கு இந்த தடை அம-ல் இருந்தது. 2001ம் ஆண்டுதான் இந்த தடை நீங்கியது. மற்ற அரசியல் கட்சிகளைவிட வித்தியாசமாக பால்தாக்கரேவின் பிரச்சாரம் இருக்கும். காதலர் தினத்திற்கு எதிர்ப்பு, ஹிட்லரை வியந்து பாராட்டுபவன் நான் என்று கூறியது, விடுதலைப்புலிகளின் கம்பீரமான போராடும் முறைக்காக நான் அவர்களைக் குறித்துப் பெருமை அடைகிறேன். விடுதலைப்புலிகள் மீதான தடை உத்தரவை மத்தியப்போக்கு கொண்ட நடுவண் அரசு நீக்க வேண்டும் என்று மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் சொல்ல முடியாத கருத்துக்களை முன்மொழிந்தவர். தனது மனதிற்குபட்ட கருத்துக்களை மற்றவர்களுக்கு பயப்படாமல் சொல்வார். அவரது மேடைப் பேச்சுகள் மிகவும் பிரபலமானவை. மேடை சொற்பொழிவில் வல்லமை படைத்தவர்.1989ல் அவர் தொடங்கிய சாம்னாதான் சிவசேனா கட்சியின் ஆயுதமாகவும், கேடயமாகவும் விளங்கியது. அந்த பத்திகையின் மூலமாகத்தான் தனது கருத்துக்களை அவர் முன்வைத்து வந்தார். பத்திரிகையாளர்களை சந்தித்து பொதுவாக தனது கருத்துக்களை அவர் பகிர்ந்துகொண்டது இல்லை. தேசிய அரசியலிலோ, மற்ற அரசியலிலோ அவர் ஈடுபட்டதும் இல்லை. மராட்டியர்களின் நலமும், மகாராஷ்டிராவின் நலமும் மட்டுமே அவரது குறிக்கோளாக இருந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மராட்டியர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில் உள்ள பணிகளை மட்டுமே அவர் கவனித்து வந்தார். அதிலும் குறிப்பாக மும்பைதான் அவரின் ஆடுகளமாக இருந்து வந்தது. >பால்தாக்கரேவின் மறைவு மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமல்ல, மகாராஷ்ர அரசியலிலும் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: