வியாழன், 2 ஆகஸ்ட், 2012

புனேயில் 4 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு!

புனேயில் தொடர் குண்டுவெடிப்பு! பட்டேலின் கேக் பெட்டிக்குள் வெடித்ததா?

Viru News
புனேயில் தியேட்டர், ஃபாஸ்ட்-ஃபூட் ரெஸ்ட்ராரென்ட் உள்பட 4 இடங்களில் இரவு அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 5-வது இடத்தில் வெடிப்பதற்குமுன் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
பரபரப்பை அதிகரிக்கும் விதத்தில், வேறு இரு தரவுகளும் இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக உள்ளன.
முதலாவது, உள்துறை அமைச்சராக புதிதாக பதவியேற்றுள்ள சுஷில் குமார் ஷிண்டே, புனே ஜங்லி மகாராஜ் சாலையில் உள்ள தியேட்டர் அரங்கத்தில் நடைபெற இருந்த விழா ஒன்றில் கலந்து கொள்ள இருந்தார். கடைசி நிமிடத்தில் அதை அவர் ரத்து செய்தார். அந்த விழா நடைபெறவிருந்த நேரத்தில், விழா நடைபெறவிருந்த தியேட்டர் இருந்த சாலையிலேயே 5 வெடிகுண்டுகளும் அடுத்தடுத்து வெடித்தன.
மாலை 7.28 மணிக்கு முதலாவது குண்டு வெடித்தது. 7.35-க்கு 5-வது குண்டு வெடித்தது.

பரபரப்பை ஏற்படுத்திய 2-வது தரவு, முதலாவது வெடிகுண்டால் காயமடைந்த தயானந்த் பட்டேல் என்பவர், தற்போது டில்லியின் உண்ணாவிரத போராட்டம் நடத்தும் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டது.
தயானந்த் பட்டேல், கேக் பெட்டி ஒன்றை பிளாஸ்டிக் பை ஒன்றில் சுற்றிய நிலையில் தமது கையில் எடுத்துவந்தார். அப்போதுதான் முதலாவது குண்டு வெடித்தது. அந்த வெடிகுண்டு, பட்டேலின் கையில் இருந்த பெட்டியில் இருந்து வெடித்தது என்று, அப்பகுதியில் நின்றவர்கள் டி.வி. சேனல்களுக்கு அளித்த பேட்டிகளில் கூறினார்கள்.
தயானந்த் பட்டேல் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது புனே போலீஸ். வாக்குமூலத்தில் அவர் என்ன சொன்னார் என்பது இன்னமும் வெளியிடப்படவில்லை.
தயானந்த் பட்டேல் தமது குழுவைச் சேர்ந்தவர் அல்ல என்று, ஹசாரே குழுவின் தொடர்பாளர் ப்ரீத்தி ஷர்மா மேனன் உடனடியாக மறுத்திருக்கிறார்.
குண்டுவெடிப்புகள் நடைபெற்ற ஜங்லி மகாராஜ் சாலையில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கடைகள், ஹோட்டல்கள் அதிகம் உள்ள இடம் என்பதால், இங்கு நடத்தப்படும் எந்தவொரு சிறிய தாக்குதலுக்கும் பெரிய எஃபக்ட் இருக்கும். மீடியாக்களிலும் அதிகப்படியான கவரேஜ் கிடைக்கும்.
அப்படியான இடத்தில் அடுத்தடுத்து 4 குண்டுகள் வெடித்துள்ளன. 4-வது குண்டு வெடிக்குமுன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தயானந்த் பட்டேல் அருகே முதலாவது வெடிகுண்டு வெடித்த இரண்டு நிமிடங்களில், ஃபாஸ்ட்-ஃபூட் ஜாயின்ட் மென்டானல்ட்ஸ் ரெஸ்ட்ராரென்ட்டுக்கு வெளியே இருந்த டஸ்பின் உள்ளேயிருந்து இரண்டாவது குண்டு வெடித்தது. இடுத்த சில நிமிடங்களில், தீனா பேங்க் அருகே மூன்றாவது குண்டும், கர்வார் சௌக் அருகே நான்காவது குண்டும் வெடித்தன.
குண்டுவெடிப்புகள் நடைபெற்று 1 மணி நேரத்தின்பின் கர்வார் சௌக் அருகே மற்றொரு குண்டு வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. குண்டு ஏன் வெடிக்கவில்லை என்பது சரியாக தெரியவில்லை.
குண்டுவெடிப்புகள் நடைபெற்ற பகுதிகள் அனைத்துமே, அருகருகே உள்ள இடங்கள்.
தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் எந்த ரகத்தை சேர்ந்தவை என்று தெரியவில்லை. ஆனால், குண்டுவெடிப்பால் ஏற்பட்ட சேதங்களைப் பார்க்கும்போது அவை வீரியமற்ற ரகத்தைச் சேர்ந்தவை என்று தெரிகிறது. பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாமல், பதட்டத்தை தோற்றுவிக்க வெடிக்கப்பட்ட குண்டுகளாக இருக்கலாம்.
அல்லது, வேறு எதையோ திசைதிருப்ப செய்யப்பட்ட முயற்சியாக இருக்கலாம்.

கருத்துகள் இல்லை: