வியாழன், 9 ஆகஸ்ட், 2012

ஜேப்பியார் கைது! கட்டிடம் இடிந்து 10 பேர் பலியான வழக்கு!

கல்லூரி கட்டுமானம் இடிந்து விழுந்து 10 பேர் உயிரிழந்த வழக்கில் கல்லூரியின் தலைவர் ஜேப்பியார் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே குன்னம் கிராமத்தில் "ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி வளாகத்தில் கூடைபந்து விளையாட்டு அரங்கு கட்டும் பணி நடந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 06.08.2012 அன்று புதிதாக கட்டப்பட்டு வரும் விûளாயட்டு அரங்க கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில் வெளி மாநில தொழிலாளர்கள், 10 பேர் இறந்தனர்.
கல்லூரி கட்டுமானம் இடிந்து விழுந்த வழக்கில் கல்லூரியின் தலைவர் ஜேப்பியார் கைது செய்யப்பட்டார். சென்னை எழும்பூரில் சிகிச்சை பெற்று வரும் ஜேப்பியார் அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.

ஜேப்பியாரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி அப்துல் மாலிக் உத்தரவிட்டார். உடல்நிலை கருதி மருத்துவமனையிலேயே காவலில் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஏற்கனவே கல்லூரி நிர்வாகி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, காவல் துறை வெளியிட்ட அறிக்கை: குன்னம் கிராமத்தில் உள்ள, "ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' பொறியியல் கல்லூரியில், கடந்த 06.08.2012 அன்று விளையாட்டரங்கு இடிந்து விழுந்ததில், வெளி மாநில தொழிலாளர்கள், 10 பேர் இறந்தனர். இறந்தவர்களில், 5 பேர் உடல், பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
குறைவான கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தி, ஸ்திரத் தன்மைக்கு தேவையான கால அவகாசம் தராமல், தொடர்ந்து கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க முயன்றதும், விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது.
இதற்கு காரணமான, கல்லூரி இயக்குனர் மரிய வில்சன் (34), நாகர்கோவில் பொறியாளர்கள், அருள் ஜெய அப்ரோஸ் (28), ராஜ்குமார் (28), குன்னம் கிராமத்தைச் சேர்ந்த சுதானந்தன் (32), கைது செயயப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: