தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று முடிகிறது. 5 மணிக்குப் பிறகு பொதுக்கூட்டம் மற்றும் வாகனங்களில் சென்று பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையகம் எச்சரித்துள்ளது.தமிழக சட்டசபைத் நாளை மறுதினம் தேர்தல் நடக்கிறது.வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி முடிவடைந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.தேர்தலையொட்டி தலைவர்கள் உச்சகட்ட பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் தொகுதி, தொகுதியாகச் சென்று ஆதரவு திரட்டினர்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் கம்யூனிஸ்ட், பா.ஜ. கட்சிகளின் தலைவர்களும் தங்கள் அணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக