சனி, 6 மார்ச், 2010

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமக்கு முழுமையான பக்கபலத்தையும் உதவிகளையும் வழங்குவதாக வாக்குறுதி தந்துள்ளாரென வன்னி மாவட்ட முன்னாள் எம்பியும், பொதுத் தேர்தலின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வன்னி மாவட்ட வேட்பாளருமான சதாசிவம் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்தச் செய்யவேண்டிய அபிவிருத்திகள் பற்றிய விடயங்களையும் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளேன்.
எங்களிடம் இழப்பதற்கு இனி எதுவும் இல்லை. நொந்து வெந்துபோன வேதனைகளை மட்டுமே சுமந்து நிற்கின்றோம். இந்தச் சுமைகளை இறக்கிவிட வழிதேடும் அவசியமும் அவசரமும் இப்போதுள்ள காலத்தின் தேவையென்பதை எல்லோரும் உணர்கின்றனர்” என்றார்.
புனர்வாழ்வு முகாம் மற்றும் தடுப்புக்காவலில் உள்ளவர்களைப் படிப்படியாக பெற்றோர்களிடம் ஒப்படைத்தல்இ சகல இனங்களையும் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம், போரினால் ஏற்பட்ட சொத்துக்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை கனகரத்னம் தேர்தல் பிரகடனமாக முன்வைத்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: