திங்கள், 10 அக்டோபர், 2011

பாலியல் அறிவூட்டல் இல்லாமையே துஸ்பிரயோகங்கள் அதிகரிக்கக் காரணம் : பிரதிப் பொலிஸ்மா அதிபர்

பாடசாலைகளில் பாலியல் கற்கை நெறிகள், விழிப்புணர்வுகள், பாலியல் தொடர்பான அறிவூட்டல் இல்லாதமையாலேயே சிறுவர்களிடையே பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்து வருகின்றன.பாலியல் தொடர்பான கல்வி அறிவை பாடசாலைகளில் ஆசிரியர்களும், வீடுகளில் பெற்றோர்களும் சிறுவர்களுக்கு எடுத் துரைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நீல் தளுவத்த.
தற்போது நடைபெற்றுவரும் பாலியல் துஸ்பிரயோகம் தொடர் பாக ஒவ்வொரு பாடசாலைகளி லும் ஒவ்வொரு பெண் பொலி ஸார் கடமையாற்றி வருகின்றனர். பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை அந்தப் பொலிஸாரிடம் தமிழிலேயே முறையிடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ். பொலிஸாரின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர்தின நிகழ்வு யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் பிரதான மண்ட பத்தில் யாழ்.தலைமைப் பொலிஸ் பரிசோதகர் சமன்சிகேரா தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
சிறுவயதிலேயே சுற்றுச்சூழல் தொடர்பான விடயங்களையும் சக நண்பர்களையும் பற்றி சிறுவர்கள் அறிந்திருத்தல் வேண் டும். உங்களின் மனதைப் பாதிக்கும் விடயங்கள், கசப்பான அல்லது துக்கமான விடயங்கள் ஏதாவது இருப்பின் மனம் திறந்து பாடசாலை ஆசிரியர்களிடமோ பெற்றோர்களிடமோ அல்லது ஆலோசகரிடமோ கூற வேண்டும்.சிலர் பெறுமதியுடைய பொருள் களைச் சிறுவர்களிடம் கொடுத்து தொடர்புகளை அதிகரித்துக் கொள்வார்கள். இரகசிய வார்த்தைகள் கூறி சிறுவர்களைப் பாலியல் துஸ்பிரயோகத்துக்குத் தூண்டி விடுகிறார்கள். இன்றைய ஊடகங்களில் அதிகளவான பாலியல் துஷ்பிர யோகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதைவிட வாய்மூலம் அறியும் தகவல்கள் அதிகளவாகவே உள்ளன.
சிறுவர்களைத் தொடும் உரிமை பெற்றோருக்கும், பாடசாலையிலே உடற்கல்வி ஆசிரியரினால் ஆண் மாணவர்களுக்கு ஆண்களும், பெண் மாணவிகளுக்குப் பெண்களுக்கும் உண்டு.கிளிநொச்சி, முல்லைத் தீவுப் பகுதிகளில் வறுமைக் கோட்டின் கீழ் அதிகளவான சிறுவர்கள் வாழ்கிறார்கள். அந் தப்பகுதிகளில் அதிகளவான துஷ்பிரயோகங்கள் நடைபெறு கின்றன. வறுமையைக் கார ணங்காட்டி அந்தச் சிறுவர் களிடம் பெறுமதியுள்ள பொருள்களை வழங்கி சிறுவர்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் சிலர்.சிறுவர்கள் பள்ளிப் பருவங்களிலேயே நாடகங்கள், சித்திரங் கள், இசைக்கருவிகள் போன்ற கலைகளுக்கு முன்னுரிமை, முதலிடம் கொடுத்து அவற்றிலே கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை: