ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

ராஜீவ் கொலை வழக்கு பரிசீலனைக்கு!


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மீள் பரிசீலனை செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றத்திற்கு அல்லது மேல் நீதிமனற்த்திற்கு மாற்றுமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய ஜீ.கே மூப்பனார் பேரவை எனும் அமைப்பினாரால் உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தறபோதைய நிலைமையின் கீழ் குற்றவாளிகள் தாக்கல் செய்துள்ள மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசபரணைக்கு எடுத்துக் கொள்ளவது உகந்ததல்லவென மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ராநீ்வ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் சாந்தக் மற்றும் பேரரிவாளன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீடு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர்களுக்கு தேரவு தெரிவித்து ஆயிரக்கனக்கானவர்களை சென்னை உயர்நீதிமன்ற சளாகத்தில் கூடியிருந்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தவர்கள் வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாகவும் ஜி.கே மூப்பனார் பேரவை தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: