ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

காதலனுடன் உல்லாசமாக இருந்த தாயை வெட்டி வீழ்த்திய மகன்

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் தன் கண் முன்பாகவே தனது தாய் இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததைப் பார்த்து கடும் கோபம் கொண்ட அவரது மகன், தாயை தலையைத் துண்டித்து வெட்டிக் கொலை செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் பகுதியைச் சேர்நதவர் முருகன். இவருக்கு 40 வயதில் செல்லம்மாள் என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு கற்பகம், மகாராஜன், மாயாண்டி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
செல்லம்மாள் பலருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால் விரக்தி அடைந்த முருகன் அவரை விட்டுப் போய் விட்டார். இந்தநிலையில் மகள் கற்பகமும் கல்யாணமாகி தனி வீடு போய் விட்டார். மகன் மகாராஜனுக்கும் சமீபத்தில் கல்யாணமாகி அவரும் தனிக் குடித்தனம் சென்றார். மகன் மாயாண்டியுடன் வசித்து வந்தார் செல்லம்மாள்.

வளர்ந்த பிள்ளைகள் திருமணமாகி போய் விட்டதால் தனது கள்ளக்காதலர்களை வீட்டுக்கே வரவழைத்து உல்லாசமாக இருக்க ஆரம்பித்தார் செல்லம்மாள். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு இரவு வீட்டுக்கு தாயாரைப் பார்க்க வந்தார் மகாராஜன். வீடு வெளியில் பூட்டப்பட்டிருந்தது. இருப்பினும் வீட்டுக்குள் சத்தம் கேட்டது. காதை வைத்துக் கேட்ட போது ஒரு ஆணும், பெண்ணும் பேசிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஜன்னல் வழியாகப் பார்த்த மகாராஜன் அதிர்ச்சி அடைந்தார். அங்கு தனது தாயார், தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததைப் பார்த்த மகாராஜனுக்கு கடும் கோபம் வந்தது.

இதையடுத்து வீட்டின் மேற்கூரையைப் பிய்த்துக் கொண்டு உள்ளே பாய்ந்தார். அவரைப் பார்த்ததும் செல்லம்மாளின் கள்ளக்காதலன் ஓடி விட்டான். செல்லம்மாளை கடுமையாக திட்டிக் கண்டித்தார் மகாராஜன். பதிலுக்கு செல்லம்மாளும் ஏதோ பேசவோ கடும் ஆத்திரமடைந்த மகாராஜன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ஓங்கி தனது தாயாரின் தலையில் போட்டார். இதில் செல்லம்மாளின் தலை தனியாக துண்டாகி விழுந்தது. அப்படியும் வெறி தணியாமால் தனது தாயாரை சரமாரியாக வெட்டித் தள்ளினார் மகாராஜன். இதில் செல்லம்மாள் பிணமானார்.

பின்னர் வெளியே வந்த மகாராஜன், அருகில் வசித்து வரும் தனது உறவினரை எழுப்பி தனது தாயாரைக் கொன்று விட்டதாக கூறி விட்டுப் போய் விட்டார். அவர் கற்பகத்திற்குப் போன் செய்து வரவழைத்தார். கற்பகம் வந்து தனது தாயார் பிணமாகிக்கிடப்பதைப் பார்த்து கதறி அழுதார். தகவல் போலீஸாருக்குப் போய் போலீஸார் விரைந்து வந்து பிணத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மகாராஜனைக் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை: