ஞாயிறு, 21 நவம்பர், 2010

பெண்களுக்கு சேலை கட்டுவதற்கு பயிற்சி

மும்பையில், பார்சி இன பெண்களுக்கு சேலை கட்டுவதற்கான பயிற்சி முகாம் இன்று நடக்க உள்ளது.

இன்றைய நவநாகரிக காலத்திற்கு ஏற்பவும், சவுகரியத்திற்காகவும் ஆண், பெண்களிடையே ஆடை உடுத்தும் பழக்கம் மாறி வருகிறது.பார்சி இனத்தை சேர்ந்த பெண்கள், கிட்டத்தட்ட நமது பாரம்பரிய உடையான சேலையை மறந்தே போய் விட்டனர். எனவே, அவர்களுக்கு சேலை உடுத்த கற்று கொடுப்பதற்காக, இன்று மும்பையில் சேலை கட்டும் பயிற்சி முகாம் தொடங்குகிறது.இதில், எம்ப்ராய்டரி காரா, டான்சோய் சேலைகள் அணியவும், பல்வேறு முறைகளில் சேலைகளை அணியவும் பயிற்சி அளிக்கப்படும். பார்சி இனத்தை சேர்ந்த அமைப்புகள், இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளன.கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக, சேலைகளின் எடை 750 கிராம் வரை இருந்தது. தற்போது, பல்வேறு அலங்கார வேலைபாடுகள் கார ணமாக, சேலைகளின் எடை கூடுகிறது. இதனால், பார்சி பெண்கள் சேலை அணியும் பழக்கும் வெகு வாக குறைந்து, திருமணங்களில் கூட சேலை அணியும் பழக்கம் குறைந்து வருகிறது.

இதற்கு பார்சி இன பெண்கள் சிலர் கூறியதாவது:நமது பாரம்பரிய உடையான சேலை யை உடுத்துவதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. சில இடங்களிலும், சில நேரங்களிலும் சேலை அசவுகரியமாகவும் உள்ளது. ஆனால், மாடர்ன் உடைகள் உடுத்துவதற்கு எளிதாகவும், சவுகரியமாகவும் உள்ளது.இதனால், பிரச்னைகள் எதுவும் எழுவதில் லை. எனவே, நாங்கள் மாடர்ன் உடைக்கு மாறிவிட்டோம். பெரும்பாலான இளம் பெண்களுக்கு சேலை கட்டும் முறையே மறந்து விட்டது. சேலை அணிவதில், பல்வேறு முறைகளும், ஸ்டைல்களும் உள்ளன. சேலையை கட்டுவதற்கு ஆர்வமாக உள்ளதால், இந்த முறைகளை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம்.இவ்வாறு பார்சி இன பெண்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: