திங்கள், 22 நவம்பர், 2010

16 சிங்கள மீனவர்கள் கைது.சென்னை துறைமுக போலீஸ் நிலையத்தில்

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடித்த 16 சிங்கள மீனவர்கள் கைது
3 படகுகள் பறிமுதல்
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடித்த சிங்கள மீனவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த 3 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்திய கடல் எல்லையில் கடலோர காவல் படையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 19-ந் தேதி கரைக்காலுக்கு கிழக்கே 35 கடல் மைல் தொலைவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்திய கடல் பகுதியில் 3 படகுகளில் மீனவர்கள் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்தனர். உடனே அந்த பகுதிக்கு விரைந்து சென்று, 3 படகுகளையும் கடலோர பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். விசாரணையில், படகில் இருந்தவர்கள் அனைவரும் சிங்கள மீனவர்கள் என்பதும், இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடித்துக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அந்த படகுகளில் இருந்த 16 சிங்கள மீனவர்களையும் கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும், 3 படகுகளையும் நேற்று சென்னை துறைமுக போலீஸ் நிலையத்தில் கடலோர காவல் படையினர் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் குணவர்மன் வழக்குப் பதிவு செய்து, சிங்கள மீனவர்களிடம் விசாரணை நடத்தினார்.பின்னர், மீனவர்கள் 16 பேரும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: