திங்கள், 16 அக்டோபர், 2017

திமுக பிரசன்னா : பார்ப்பனர்கள் உஞ்சவிருத்தி செய்யலாம் ... திமுக வாக்கு வாங்கி சரிகிறது SV சேகர் கவலை

தோழர். ஆலஞ்சி அவர்களிள் பதிவு.
ஏன் பதறுகிறார்கள் ..
உண்மையைதானே சொன்னார் தமிழன் பிரசன்னா.. யார் பிராமணன்.. அடுத்த வேளை சோத்துக்கு யாசிப்பவனே பிராமணன் என்கிறதே மநு தர்மம்... அதை தான் வேறு மாதிரியாக வீட்டுக்கு வீடு யாசிப்பவனென்றார் .. அசுரனின் சொல் கிழித்திருக்கும் .. காஞ்சி பெரியவரின் அருளுரையை வாங்கி படிக்கலாம் .. எதற்கும் ஆசைபடாத கடவுளின் அருளை மட்டுமே நம்பி வாழ்வது தவமென்கிறாரே.. பார்பனனின் அருமைகளை தான் பிரசன்னா சொன்னார் கோபம் வருகிறதா.. பார்பான் என்றால் ஏன் பதறுகிறீர்..
ஒழுக்கமான வாழ்வியல் என்கிறாரே.. பெரியவர்
அதை இல்லையென்கிறீர்களா..
திமுகவின் வாக்குவங்கி குறையும் என்கிறார் சேகர் .. பாவம் என்றைக்கு வாக்களித்து இருக்குறீர்.. ..
என் சிறிய வயதில் நான் பார்த்திருக்கிறேன்.. எங்களுர் அக்ரஹாரங்கள் சூழ்ந்த ஊர்.. வட்ட வடிவிலான செம்பு கையில் தூக்கிக்கொண்டு சிறிய குச்சியால் அடித்துக்கொண்டே வருவார் பிராமணர்.. அக்ரஹாரத்து பெண்கள் அவரின் சிறிய துணி கட்டிய செம்பில் (கூஜா போன்றவடிவ பாத்திரத்தில்) பணத்தை இடுவார்கள் ..
ஏதோ சொல்லிக்கொண்டே போவார்..

திருக்குறளின் முதல் குறள் உச்சரிப்பு பிழையால் ......., தவறாக கற்பிக்கப்படுகிறது.

Thagadoor Sampath : திருக்குறளின் முதல் குறள் உச்சரிப்பு பிழையால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, தவறாக கற்பிக்கப்படுகிறது.
ஆதி பகவன் எனும் இச்சொற்றொடர் Aadhi bagavan என்று உச்சரிக்கப்படுகிறது. அது தவறு Aadhi pagavan என்றே உச்சரிக்க வேண்டும்.
அதாவது,
பகவன் (pagavan) என்பது பகலவனை குறிக்கும் செய்யுள் இலக்கண சுருக்க குறிப்பு ஆகும்.
ஆகவே ஆதி பக(ல)வன் என்றே கொள்ள வேண்டும்.
மேலும், 'ஏடெடுத்து எழுதியோர் பிழை'யால், திருக்குறளில் பல திரிபுகள் ஏற்பட்டுள்ளதாக பலர் கூறுவர். அவ்வகையில், வ.உ.சிதம்பரனார் அவர்கள் தனது திருக்குறள் உரையில் பலகுறள்களில் திருத்தத்தை மேற்கொண்டுள்ளார். அந்த திருத்தங்களுக்கு இலக்கண விளக்கமும் தருகிறார்.
அவ்வகையில், ஐயா Hv Vichu அவர்கள் 'தமிழனின் தத்துவம் திருக்குறள் அறம்' எனும் நூலில் 'ஆதிபகலன்' என்றே குறிப்பிட வேண்டும் என்கிறார். 'ல' என்பது 'வ' என்று எடுத்தெழுதப்பட்டிருக்கலாம் என்பதே அவர் கருத்து.

கர்நாடகாவிலும் தலித் அர்ச்சகர்கள் நியமிக்கப்படும்! முதல்வர் சித்தராமையா அறிவிப்பு!

கேரளாவைப் போல் கர்நாடகாவிலும் தலித்துகளை கோவில் அர்ச்சகர்களாக நியமிக்கப் போவதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் பேசிய அவர், கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 35 ஆயிரம் கோயில்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் தலித்துகள் அர்ச்சகர்களாக பணியாற்றக் கூடாது என விதி எதுவும் இல்லை, என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், கேரளாவைப் போன்று, கர்நாடகாவிலும் தலித்துகளை கோயில் அர்ச்சகர்களாக நியமிக்கும் நடவடிக்கையை மேற்கொள்வோம் என சித்தராமைய்யா தெரிவித்தார். அண்மையில், 6 தலித்துகள் உட்பட பிராமணர் அல்லாத 36 பேரை, கோயில் அர்ச்சகர்களாக கேரள அரசு நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது....   நியுஸ்7

சீவக சிந்தாமணி, மணிமேகலை, சங்கத்தமிழ் நூல்கள் ... உலகுக்கு அளித்த உ.வே.சா

subashini.thf என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஓர் உலா - 136
========================
சைவ சமய பின்புலத்தோடு வளர்ந்தவர் உ.வே.சா. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடத்துப் பயிற்சி பெற்று பின்னர் திருவாவடுதுறை மடத்தில் தேசிகரிடம் கற்றவர். ஆகையினால் வலுவான சைவ சமயப் பின்னணி அவருக்கு நிறைந்திருந்தது. அவ்வப்போது மடத்திற்கு வருகின்ற வைஷ்ணவ அன்பர்களிடமிருந்தும் மகாவித்வானிடமிருந்தும் வைஷ்ணவ நூல்களையும் கற்றிருந்ததால் வைணவ நெறிகளைப்பற்றிய பின்புலத்தையும் அவர் பெற்றிருந்தார். சீவக சிந்தாமணி பதிப்புக்கான ஆராய்ச்சியின் போதுதான் உ.வே.சாவிற்குச் சமண சமய நெறிகளைப் பற்றிய அறிமுகம் கிட்டியது. பல சமண நண்பர்களின் துணையும் கிடைத்ததால் சமண நூல்களைப் படித்தும் அவர்களுடன் கலந்துரையாடியும் அந்த நெறி பற்றிய விசயங்களையும் மதக் கொள்கைகளையும், வழிமுறைகளையும் அறிந்து கொண்ட பின்னரே சீவக சிந்தாமணியை உ.வே.சா பதிப்பித்தார்.

*செக்ஸ்-பெண்-ஆர்கசம்* .. வெளிப்படையா பேச பெண்களை அனுமதிங்க ! இல்லையெனில் ... .

Lulu Deva Jamla< *செக்ஸ்-பெண்-ஆர்கசம்*
//ஒரு ஆண் பெண் உறவென்பது மிகவும் புனிதமானது. பொழுது போக்காய் அதை பற்றி பேசுவது தவறு!//
👆👆👆இது நேத்திக்கு ஒரு பதிவில் ஒருத்தரோட பின்னூட்டம். அதுக்கு நான் பதில் குடுக்கவே தேவையில்லாம பண்ணிட்டா ஒரு 42 வயசுக்காரி பேபிமா... இந்தா படி 👇👇👇
“பொழுது போக்காய்? என்ன புண்ணாக்கு பொழுது போக்காய்..? இத கேட்க மாட்டியா லுலு.. இங்க எத்தன பொண்ணுங்க எங்களை ஒளிச்சிக்கிறோம் தெரியுமா? எங்கள் ஒவ்வொருவரின் மனதை தான் நீ எழுதாக்குகிறாய்! உன் எழுத்த படிக்கிற பொண்ணுங்க எத்தன பேரு இவளுக்கு எல்லாமே தெரியுதுன்னு பேரு மூச்சு விடறாங்கன்னு தெரியுமா.. ? எப்படி நான் நினைக்கிறத அப்படியே எழுதுறான்னு துள்ளி உள்ளுக்குள்ளே குதிக்கிறாளுங்க தெரியுமா..? தன்னை மாத்திக்கிறாளுங்க தெரியுமா..? இன்னும் சிலது உன் மேல காண்டு இருந்தாலும் மறைஞ்சு படிச்சிட்டு என்ன உண்மையாத்தான் சொல்லுறான்னு வெளிய துப்பிகிட்டு வேஷம் போடராளுங்கன்னு தெரியுமா..? இங்க லுலு பதிவிடறது வாழ்க்கை தேடலில் தொலைஞ்சி மெல்ல மெல்ல தேஞ்சிகிட்டு இருக்கிற மனசுங்கள கொஞ்சம் பாருங்கடா பாருங்கடின்னு தான்.. இதையெல்லாம் எழுதி ஆபாசவாதின்னு பேரு வாங்கணும்னு அவளுக்கு வேர்த்தா வடியுது? லுலு செக்ஸ் பத்தின பெண்ணுணர்வுகள் பத்தி எழுதுறது வெறும் பொழுது போக்குக்கு அல்ல! மைன்ட் இட் யூ இடியட்ஸ்! 😏

அவள் புருஷனை இவள்... இவன் பொண்டாட்டியை ... இல்லத்தரசிகளுக்கு சூனியம் வைக்கும் சீரியல்கள்

Bhimraj Gandhi  ;அவளுக்கு இவ புருஷன் மேல ஒரு கண்ணு
இவனுக்கு அவ சொத்து மேல ரெண்டு கண்ணு
அவன் இவ கற்பத்த அழிக்க பாக்குறான்
இவ மாமியாகாரிய ஊட்டவிட்டு தொறத்துரா
மாபிள்ளைக்கும் மச்சானுக்கும் ஆகாது
மருமகளுக்கும் மாமியாருக்கும் ஆகாது
அண்ணிக்கும் நாத்தனாருக்கும் ஆகாது
சித்தப்பன் குடியகெடுக்க துடிப்பான்
பெரியப்பன் குடிச்சிட்டு மூலையில கெடப்பான்
ஒருத்தன் காதலிச்சுட்டு ஏமாதிடுறான்
ஒருத்தி கல்யாணம் பண்ணிட்டு ஏம்மாதிடுரா
வீட்ல இருக்கற கொழந்தைங்க எபிசீடி சொல்லவே கஷ்டப்படும்
ஆனா இவங்க கொழந்தைங்க பக்கம் பக்கமா தத்துவம் பேசும்
தேங்கா கெட்டு போயிருந்தா நாமெல்லாம் தூக்கி போட்டுட்டு வேற தேங்கா வாங்குவோம்

ஆறுமுக நாவலரின் "இந்து-‌ ஷ‌ரியா ச‌ட்ட‌ம்"! வெள்ளாள ஆதிக்க .. சைவ வினா விடை!

kalaimarx : ம‌ல‌ங் க‌ழிப்ப‌து எப்ப‌டி? ஆறுமுக‌நாவ‌லர்,
யாழ் சைவ‌ வெள்ளாள‌ருக்காக‌ எழுதிய‌‌ "இந்து-‌ ஷ‌ரியா ச‌ட்ட‌ம்"! சைவ‌ ச‌ம‌யிக‌ள் அனைவ‌ரும் ப‌டித்துப் ப‌ய‌ன் பெறுக‌.
இங்கே ஆறுமுக‌ நாவ‌ல‌ர் குறிப்பிட்ட‌து ம‌னித‌ ம‌ல‌ம் அல்ல‌, அது "ஆன்மீக‌ ம‌ல‌ம்" என்று, இத‌ற்கும் த‌த்தவார்த்த‌‌ விள‌க்க‌ம் கொடுக்க‌ சில‌ர் வ‌ருவார்க‌ள்.
// 6. எந்தத் திக்குமுகமாக இருந்து கொண்டு மலசலங் கழித்தல் வேண்டும்?
பகலிலே வடக்கு முகமாகவும், இரவிலே தெற்கு முகமாகவும் இருந்து கொண்டு மலசலங் கழித்தல் வேண்டும்.
7. எப்படி இருந்து மலசலங் கழித்தல் வேண்டும்?
தலையயுங் காதுகளையும் வஸ்திரத்தினாலே சுற்றி, மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்து மலசலங் கழித்தல் வேண்டும்.
சௌசம்
8. மலசலங் கழித்தவுடன் யாது செய்தல் வேண்டும்?
எழுந்து, சலக்கரையை அடைந்து, சலத்துடன் ஒரு சாணுக்கு இப்பால் இருந்து கொண்டு சௌசஞ் செய்தல் வேண்டும்.

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

மகளுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமையால் தம்பதியர் தற்கொலை: திருப்பூரில்

tamilthehindu : மகளுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமையால், பாண்டிச்சேரியை சேர்ந்த் 5 குழந்தைகளின் பெற்றோர் திருப்பூரில் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது: பாண்டிச்சேரி கதிர்கம்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜபெருமாள்(37). இவரது மனைவி அம்பிகா(32). இருவரும் கூலிவேலை செய்து வந்தனர். தம்பதியருக்கு 2 பெண் மற்றும் 3 ஆண் என மொத்தம் 5 குழந்தைகள். தம்பதியரின் மூத்தமகள் பாண்டிச்சேரி பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்தநிலையில், அங்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக பாண்டிச்சேரி கோரிமேடு போலீஸாரிடம் தம்பதியர் புகார் அளித்தனர். அதன்பேரில் போஸ்கோ சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட சிறுவனை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் ராஜபெருமாள் குடும்பத்தினர் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்தனர். பாண்டிச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த பாதிக்கப்பட்ட மகளை அழைத்துக்கொண்டு, கடந்த 13-ம் தேதி இரவு அங்கிருந்து விழுப்புரம் வந்தனர். அதன்பின் அங்கிருந்து மூவரும் ரயிலில் திண்டுக்கல்லுக்கு வந்தனர். அதன்பின், திருப்பூருக்கு பேருந்தில் வந்தனர்.

கௌரி லங்கேஷ் வழக்கு விசாரணை முறையான முடிவை எட்டாது.. பத்திரிகையாளர் சிவசுந்தர்!

thetimestamil : லங்கேஷ் பத்திரிக்கையில் பத்தி எழுத்தாளராகவும் ,கௌரி லங்கேஷூடன் இணைந்து பணி ஆற்றியவருமான சிவசுந்தர்  பத்திரிக்கையாளர் மன்றத்தில் கடந்த 8ஆம் தேதி பேசினார். தமிழ்நாடு பண்பாட்டு பேரவையும் , சென்னை பத்திரிகையாளர் சங்கமும் இணைந்து இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
பத்திரிகையாளர் சிவசுந்தர்
2014 மே மாதம் முதல் 2017 மே மாதம் வரை ( மோடி பிரதமரானதிலிருந்து ) 154 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கௌரி லங்கேஷை கொன்ற  கொலையாளிகள் தண்டிக்கப்படலாம்.ஆனால்  இந்தக் கொலைகளை பின்னிருந்து இயக்கிய சூத்திரதாரிகள் கண்டுபிடுக்கப்படபோவதில்லை.எனது கவலையெல்லாம் அடுத்ததாக யார் கொல்லப்பட போகிறார்கள் என்பதுதான்.
கௌரி லங்கேஷூற்கு ” அன்னா பொலிட்கோவஸ்கியா ” விருது வழங்கப்பட இருக்கிறது. இது ரஷ்ய நாட்டு பத்திரிக்கையாளரின் நினைவாக 2006 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் உயரிய விருதாகும்.

விஜய் டிவி நீயா நானா.. சிறப்பு விருந்தினராக பிராடு செந்தமிழன் மணியரசன்...

Sivasankaran Saravanan : கேள்வி : சித்த மருத்துவர் சிவராமன் மீது உங்களுக்கு வருத்தம் இருக்கிறதாமே?
பதில் : ஆமாம் உண்மை தான். வாட்சப் வதந்திகளை பற்றிய ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் மருத்தவர் சிவராமன் வந்திருந்தார். எதிர் தரப்பு சிறப்பு விருந்தினராக பிராடு செந்தமிழன் மணியரசன் என்பவரும் வந்திருந்தார். கண் பார்வை குறைபாடு வந்தால் யாரும் கண்ணாடி அணியக் கூடாது, அது இயற்கைக்கு எதிரானது. ஏனென்றால் யாரும் பிறக்கும்போது கண்ணாடி போட்டுக்கொண்டு பிறப்பதில்லை என்று பேசியவர் செந்தமிழன். நீயா நானா நிகழ்ச்சிக்கு எப்படி வருவாரோ என நான் பயந்துகொண்டே இருந்தபோது நல்லவேளையாக இயற்கைக்கு மாறாக பேண்ட் சட்டை போட்டுக்கொண்டு தான் வந்தார.
பிராடு செந்தமிழனிடம் இது பற்றி கேள்வி கேட்டபோது நிகழ்ச்சியை விட்டு போய்விடுவேன் என பிலிம் காட்டினார். பிறகு மீண்டும் வலியுறுத்திக்கேட்கவே, " உலகத்துல நிறைய மருத்துவமுறைகள் இருக்கு. அதுல நீங்க படிச்ச இங்கிலீஷ் மெடிசன் ல மட்டும் தான் கண்ணாடி போட சொல்றாங்க. சித்த மருத்துவத்தில் கண்ணாடியே போடாம குணப்படுத்துகிற வழிமுறைகள் உள்ளன " என்றார்.
இதுவரைக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.
அதற்கு பிறகு அங்கு நடந்ததை நான் சொல்கிறேன்.

நிலவேம்பு ஒரு மோசடி? இந்த மீம் புரியாதவங்க ஒரு குண்டா நிலவேம்பு குடிங்க !!

கிளிமூக்கு அரக்கன் : ஏமாற்றுக்கார சித்த மருத்துவ ஏஜெண்டு கு.சிவராமன். இதுக்கெல்லாம் நீங்க வெட்கப்படனும்!!
-- உலகிலேயே முதன்முறையாக ஒரு மாநிலம் தழுவிய Health Advisory க்கு முட்டுக்கொடுக்க திராபையான அறிவியல் இதழில் வெளியான அறிவியல் கட்டுரையை ஆதாரமாக தந்த அவலம்.
ஆகச்சிறந்த கிங்க்ஸ் நிறுவனமும் தேசிய சித்த அறிவியல் கழகமும் ஏன் குப்பை அறிவியல் இதழ் என்று அறியப்பட்ட ஒரு இதழில் தங்கள் 'ஆகச்சிறந்த' அறிவியல் கட்டுரையை பதிப்பித்தனர் ?
கட்டுரை: Protective Effect of Polyherbal Siddha Formulation - Nilavembu Kudineer against Common Viral Fevers Including Dengue :A Case Approach .
இதழ்: International Journal of Pharmaceutical Sciences and Research
முட்டுக்கொடுத்தவர் பெயர்: திருமகனார் மரு. சிவராமன். கு
இந்த இதழ் போலி/குப்பை அறிவியல் இதழ் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பட்டியல்: http://beallslist.weebly.com/standalone-journals.html (ஒவ்வொரு ஆராய்ச்சி மாணவனும் தன் அறிவியல் கட்டுரையை ஒரு இதழுக்கு அனுப்பும் முன் அது உண்மையா அல்லது போலியா என்று அறிந்துக்கொள்ள உதவும் பட்டியல் இது)
இதற்கு மருத்துவர் சிவராமன். கு என்ன சொல்லப்போகிறார் ?
ஆக, தகுந்த ஆராய்ச்சி செய்வதற்கு முன் நீங்கள் அரசாங்கத்தினை ஏமாற்றி ஒரு health advisory யினை வெளியிட வைப்பீர்கள். அதைக் கேட்டுக்கொண்டு பொதுமக்களாகிய நாங்களும் நீங்கள் சொல்லும் கசாயத்தெல்லாம் குருட்டாம்போக்கில் செய்து குடித்துக்கொண்டே இருக்கவேண்டும். நல்ல டிசைன்

சாயக்கழிவுகள் கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டம்!

சாயக்கழிவுகள் கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டம்!
மின்னம்பலம் : சாயக்கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டம் விதிக்கப்படும் என வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறை கழிவுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், லாரிகள் மூலம் திண்டுக்கல் துரைக்குளத்தில் கொட்டப்படுவதாகப் புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறன. அதுவும், பகல் நேரத்தில் சாயக்கழிவுகளை கொட்டினால் மக்களின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டும் என்பதால், நள்ளிரவில் சாயக்கழிவுகள் கொட்டப்படுகின்றன என்று கூறப்படுகிறது.

எடப்பாடியின் ரூ.1000 கோடி தார் கொள்முதல் ஊழல் .. ராமதாஸ் குற்றச்சாட்டு!



ரூ.1000 கோடி தார் ஊழல்!மின்னம்பலம் : 2011-ஆம் ஆண்டில் தொடங்கிய ஊழல் சுனாமி இன்னும் ஓயவில்லை என்பதற்கு உதாரணம்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்றுள்ள ரூ.1000 கோடி தார் கொள்முதல் ஊழலாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (அக்டோபர் 15) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழல் செய்வது மட்டும் தான் அதிமுக அரசின் ஒற்றைக் கொள்கையாக உள்ளது. 2011-ஆம் ஆண்டில் தொடங்கிய ஊழல் சுனாமி இன்னும் ஓயவில்லை என்பதற்கு உதாரணம்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்றுள்ள ரூ.1000 கோடி தார் கொள்முதல் ஊழலாகும்.

கேரளா இடைதேர்தலில் காங்கிரஸ் வெற்றி ... வெங்கரை சட்டசபை இடைதேர்தலில் ஆளும் இடதுசாரிகள் தோல்வி!

maalaimalar : கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வேங்கரை சட்டசபை தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் குஞ்சாலிக்குட்டி. காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த முஸ்லிம் லீக் கட்சி சார்பில் இவர் வெற்றி பெற்று இருந்தார். இவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பி. ஆனதால்  எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இந்த தொகுதிக்கு கடந்த 11ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. முஸ்லிம் லீக் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் இந்த முறையும் அந்த கட்சிக்கே காங்கிரஸ் கூட்டணியில் சீட் ஒதுக்கப்பட்டது. முஸ்லிம்லீக் சார்பில் கே.என்.ஏ.காதர் போட்டியிட்டார். ஆளும் கம்யூனிஸ்டு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தபஷீர், பாரதீய ஜனதா சார்பில் ஜனசந்திரன் உள்பட மொத்தம் 6 பேர் போட்டியிட்டனர்.
இன்று காலை ஓட்டு எண்ணியபோது முதல் சுற்றில் காங்கிரஸ் கூட்டணியின் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.என்.ஏ.காதர் முன்னிலையில் இருந்தார். இறுதியில் அவர் 23,310 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2-வது இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பஷீரும், எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த நஷீர் 3-வது இடத்திலும் இருந்தனர். பாரதீயஜனதா வேட்பாளர் 4-வது இடத்தில் இருந்தார். ஓட்டுகள் விவரம் வருமாறு:-

கே.என்.ஏ.காதர் (முஸ்லிம் லீக்) - 65,227. 
பி.பி.பஷீர் (மார்க். கம்யூ)  - 41,917.
நசீர் (எஸ்.டி.பி.ஐ.) - 8,648.
ஜனச்சந்திரன் (பாரதீய ஜனதா) - 5,728.

குர்தாஸ்பூர் காங்கிரஸ் வெற்றி : 1,93,219 லட்சம் அதிகப்படியான வாக்குகளில் நாடாளுமன்ற இடைதேர்தல் ... பாஜகவின் தொகுதி .

Gurdaspur bypoll result: Congress' Sunil Jakhar wins by 1,93,219 votes
Mathi Oneindia Tamil : சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் லோக்சபா தொகுதிக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாஹர் 1,93,219 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை வேட்பாளரை வீழ்த்தி மிக பிரமாண்ட வெற்றியைப் பெற்றார். பாஜக வசம் இருந்த இத்தொகையை காங்கிரஸ் கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவின் வினோத் கண்ணா குர்தாஸ்பூர் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றார். கடந்த ஏப்ரல் மாதம் வினோத் கண்ணா காலமானார். s இதையடுத்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாஹர் முன்னிலை வகித்தார்.வாக்கு எண்ணிக்கை முடிவில் சுனில் ஜாஹர் 1,93,219 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். பாஜக வசம் இருந்த தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது.

தாடி பாலாஜி மனைவியை தீ வைத்து கொலை செய்ய... மனைவி குற்றச்சாட்டு!

இன்ஸ்பெக்டர் மிரட்டல்
tamiloneindia :என்னையும், மகள் போஷிகாவையும் அறையில் பூட்டி தீவைத்து கொலை செய்ய முயன்றார் என்று தாடி பாலஜியின் மனைவி நித்யா கூறியுள்ளார். மாடியில் இருந்து எட்டி உதைத்து என்னை கொலை செய்ய முயன்றார் என்றும் நித்யா பரபரப்பு புகார் என்று கூறியுள்ளார். திரைப்பட நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. இவரது மனைவி நித்யா. இவர் மகள் போஷிகாவுடன் மாதவரம் அருகே பூம்புகார் நகரில் வசித்து வருகிறார்.
நடன கலைஞரான நித்யாவை, தாடி பாலாஜி காதலித்து திருமணம் செய்தார். காதல் திருமணம் கசந்து விட்டது. இருவரும் மாறி மாறி போலீசில் புகார் அளித்து வருகின்றனர். புகார்கள் குறித்தும் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்த உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

குஜராத் முதல்வர் ஆனந்தி பட்டேல் மகள் 422 ஏக்கர் 92 வீத கழிவில் ... தொடர் கொள்ளைகள்

https://economictimes.indiatimes.com/
Gujarat CM Anandiben Patel daughter's partners got 422 acres land at 92% discount 
 Business associates of Gujarat Chief Minister Anandiben Patel's daughter, Anar Patel, got 422 acres of land in 2010 from the state government at Rs 15 per square metre, a huge 91.6% discount to the government's stamp duty rate of Rs 180 per square metre.
Further, a cow protection outfit, Muralidhar Gau Seva Trust, which had also applied for land in the same area — Amreli, near Gir forest reserve — was offered land at Rs 671 per square metre, far higher than the stamp duty rate for that plot, Rs 190 per square metre. Both proposals were considered by a state government committee at the same meeting.
ET had reported the allotment to Wildwoods in its edition on February 5 ('How Biz Partners of Guj CM's Daughter Landed a Good Deal).

Wildwoods Resorts, owned by Dakshesh Shah and Amol Sheth, whose companies have extensive business dealings with firms owned by Anar Patel, had received permission to change the land use category from agricultural to non-agricultural.

பட்டாசு வெடித்தால் டெங்கு வராது .. அறிவு கொழுந்துகள் சுமந்த ராமன் , நாராயணன் திருப்பதி கூட்டறிக்கை

Suba.Veerapandian : · பட்டாசு வெடித்தால் #டெங்கு வராது- நாராயணன். வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு வராது - ஓர் அமைச்சர். டெங்குவையே தாங்கி விடலாம் போலிருக்கிறது
palanivel.manickam.: இந்த இரண்டு பதிவுகளை எழுதியவர்கள் சுமந்த் சி.ராமன் என்று ஊடகங்களால் மட்டுமே நம்பப்படும் பல்துறை விற்பன்னர் மற்றும் பாஜகவின் நாராயணன்,சமூகத்தில் சிறந்த அறிவாளிகள் என பொதுவெளியில் ஊடகங்களால் நம்ப வைக்கப்பட்டிருப்பவர்கள்,
ஆனால் அவர்களோ தாங்கள் சார்ந்த ஒரு மதத்தை,அதன் சம்பிரதாயங்களை,பண்டிகைகளை தூக்கிப்பிடிக்க எந்த அளவு கீழ் இறங்குகிறார்கள் என்றால் மக்கள் சமூகத்துக்கு பெரும் தீங்கு விளைவிக்க கூடிய, சுற்றுசூழலை மாசுபடுத்தக்கூடிய,ஆறறிவு இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கிற மனிதனை மற்ற அறிவு சிற்றிவு உயிரினங்களையும் பாதிக்கக்கூடியது பட்டாசு என்பதை அறியாதவர்களா அவர்கள்? இல்லை, தங்கள் மதவெறியின்பால் அதனை வலிந்து திணிக்கிறோம் என்பதை அறிந்தே மிகவும் அறியாமையில் இருக்கும் மனிதர்களை விட அறிந்தே செய்கிறார்கள் இந்த முகமூடி இந்துத்துவ மனிதர்கள்...

சாலையில் பட்டாசு வெடித்தால் 2,000 ரூபாய் அபராதம்

தினமலர் : போக்குவரத்துக்கு இடையூறாக, சாலைகளில் பட்டாசு வெடித்தால், 2,000 ரூபாய் வரை, அபராதம் விதிக்கப்படும்' என, போலீசார் எச்சரித்து உள்ளனர்.வரும், 18ல், தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து, பள்ளி மாணவர்களுக்கு, போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.போலீசாருக்கு உத்தரவு'இந்தாண்டு, பட்டாசால் தீ விபத்து உள்ளிட்ட, அசம்பாவிதங்கள் நிகழாத வகையில், சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும்' என, போலீசாருக்கு, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் உத்தர விட்டு உள்ளார். இந்நிலையில், முக்கிய சாலைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், பட்டாசுகள் வெடிக்க, போலீசார் தடை விதித்துள்ளனர்.இது குறித்து, போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பெட்ரோல் பங்க், குடிசை பகுதி, நெருக்கமான குடியிருப்பு பகுதிகளில், பட்டாசுகள் வெடிப்பதால், மக்கள் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். மேலும், முக்கிய சாலைகளில் பட்டாசுகள் வெடிப்பதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவ தோடு, போக்குவரத்துநெரிசலும் ஏற்படுகிறது.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை’ ராகுல்காந்தியை சந்தித்தபின் திருநாவுக்கரசர் (கவலை?)!!

தினத்தந்தி : புதுடெல்லி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் விரைவில் கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்க தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இதேபோல் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் ராகுல்காந்தியை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:- கூட்டணி இல்லை பா.ஜனதாவின் பினாமி அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. சட்டசபையில் பெரும்பான்மை இல்லை. எனவே அரசு எடுக்கும் முடிவு அரசியலமைப்பு சட்டப்படி சரியானதாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 30 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்தால்தான் இதில் தெளிவு கிடைக்கும்;ஒட்டுமொத்த அ.தி.மு.க.வே வந்தாலும் அவர்களோடு கூட்டணி சேர காங்கிரஸ் தயாராக இல்லை. அ.தி.மு.க. ஊழல் கட்சியாகி விட்டது.

பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு இந்திரா காந்தி விருது - சோனியா வழங்குகிறார்


maalaimalar :தமிழ்நாட்டை சேர்ந்தவர், பிரபல கர்னாடக இசை பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு 2015-2016 ஆண்டுக்கான இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு இந்திரா காந்தி விருது - சோனியா வழங்குகிறார்
புதுடெல்லி: தமிழ்நாட்டை சேர்ந்தவர், பிரபல கர்னாடக இசை பாடகர் டி.எம். கிருஷ்ணா (வயது 41). இவருக்கு 2015-2016 ஆண்டுக்கான இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கப்படுகிறது. இதற்கான முறையான அறிவிப்பை விருது ஆலோசனைக்குழுவின் உறுப்பினர் செயலாளர் மோதிலால் வோரா, டெல்லியில் நேற்று வெளியிட்டார். டி.எம். கிருஷ்ணா, ஆரம்ப கால இசைப்பயிற்சியை பி. சீதாராம சர்மாவிடமும், பின்னர் செங்கல்பட்டு ரெங்கநாதனிடமும் பெற்றார்.

மெர்சல் .. 3 நாட்களுக்கு பின்தான் .. தமிழ் ராக்கர்ஸ் சலுகை அறிவிப்பு..

வெப்துனியா :புதிதாய் வெளியாகும் படங்களை வெளியான அதே தினத்தில் வெளியிட்டு தமிழ் ராக்கர்ஸ், விஜய்யின் மெர்சல் குறித்து ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படம் இன்னும் நான்கு நாட்களில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சமந்தா, காஜல், நித்யா மேனன் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். இந்த படத்தை தேனாண்டாள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளாது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பல சிக்கல்களையும் கோர்ட் வழக்குகளையும் தாண்டி மெரசல் தீபாவளிக்கு வெளியாகிறது.

3000 அடி உயரமலையில் இருந்து விழுந்து உயிரிழப்பு ... மூட நம்பிக்கை மரணம்!


வெப்துனியா :திருச்சி அருகே உள்ள கோவில் ஒன்றின் பிரகாரத்தை சுற்றி வரும்போது பக்தர் ஒருவர் தவறி விழுந்துள்ளார். திருச்சியில் உள்ள முசிறி அருகே சஞ்சீவி பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் 5000 அடி உயரத்தில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, கோயில் பிரகாரத்தை சுற்றி வருவது வழக்கம். அது போல, இன்று கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்துள்ளார். அப்போது தவறி விழுந்துவிட்டார். கோயில் நிர்வாகத்துக்கு புகார் அளிக்கப்பட்ட பின்னர் போலிஸார் அங்கு விரைந்து வந்தனர். முதற்கட்ட விசாரணையில் அந்த பக்தர் இறந்து இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்கள் யாரும் சபரிமலைக்கு செல்லமாட்டார்கள்’ ஐயப்பம் கோவில் கோபாலகிருஷ்ணன் ..


நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்கள் யாரும் சபரிமலைக்கு செல்லமாட்டார்கள் என திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருவனந்தபுரம், தென் இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதை எதிர்த்து இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதை விசாரித்து வந்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷண் ஆகியோரை கொண்ட அமர்வு, இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

அமித் ஷா 1.. 2.. 3... மாதவ்புரா வங்கி ஊழல் .. 1300 கோடி ரூபாய்.. ஹரேன் பாண்டியா கொலை!

shahjahanr: மாதவ்புரா வங்கி ஊழல்
மாதவ்புரா கூட்டுறவு வங்கி குஜராத்தின் மிகப்பெரிய கூட்டுறவு வங்கியாக இருந்தது.
2000ஆம் ஆண்டில் அதில் சுமார் 50 ஆயிரம் முதலீட்டாளர்கள் இருந்தனர். வங்கியிடம் சுமார் 1300 கோடி ரூபாய் இருந்தது.
கேதன் பரேக், மும்பையின் ஸ்டாக் புரோக்கர்.
மாதவ்புரா வங்கி, கேதன் பரேக்குக்கு 1030 கோடி ரூபாய் கடன் வழங்குகிறது. இன்னும் சில புரோக்கரேஜ் நிறுவனங்களுக்கும் கடன் வழங்குகிறது.
ரிசர்வ் வங்கி விதிகளின்படி, பங்குச் சந்தை தரகர்களுக்கு வங்கிகள் 15 கோடிக்கு மேல் கொடுக்கக்கூடாது.
மாதவ்புரா வங்கியின் பணத்தைக்கொண்டு கேதன் பரேக் உள்ளிட்டவர்கள் 2001 ஆரம்பத்தில் பங்குச்சந்தை உச்சத்தைத் தொட்டபோது செமையாக காசு பார்த்தார்கள்.
ஆனால் பங்குச்சந்தை ஊழல் வெடித்தது. சரிவு ஏற்பட்டது.
மாதவ்புரா வங்கி கேதன் பரேக்குக்கு பெரும்தொகை கடன் கொடுத்த விவகாரம் 2001 மார்ச்சில் வெளியாகிறது.
வங்கியில் பணம் போட்டவர்கள் திருப்பி எடுக்க வருகிறார்கள். ஆனால் பணம் இல்லை.