செவ்வாய், 10 அக்டோபர், 2023

தயாநிதி மாறனின் கணக்கை ஹேக் செய்து பணம் திருட்டு! டிஜிட்டல் இந்தியாவில் தனிப்பட்ட விவரங்களுக்கு பாதுகாப்பில்லை..

tamil.oneindia.com - Vishnupriya R  :  சென்னை: டிஜிட்டல் இந்தியாவில் நமது தனிப்பட்ட விவரங்களுக்கு பாதுகாப்பு இல்லை என திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ஓடிபி சொல்லாமலேயே ரூ 99,999 திருடப்பட்டதை அடுத்து மத்திய அரசுக்கு புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தயாநிதி மாறன் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: டிஜிட்டல் இந்தியாவில் எங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் பாதுகாப்பாக இல்லை. ஞாயிற்றுக்கிழமை அன்று என்னுடைய ஆக்சிஸ் வங்கியில் (joint account) உள்ள தனிப்பட்ட சேமிப்பு கணக்கிலிருந்து ரூ 99,999 திருடப்பட்டுள்ளது.
அதுவும் நெட் பேங்கிங் மூலம் அதற்குரிய அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் மீறி யாரோ பணத்தை எடுத்துவிட்டார்கள். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஓடிபி எண், இதுதான் அனைத்து பணப்பரிமாற்றத்திற்கும் முக்கியமானதாக இருக்கிறது.
அப்படிப்பட்ட ஓடிபி எனக்கு என் வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரவில்லை.

என்னுடைய சேமிப்பு கணக்கு ஜாயின்ட் அக்கவுன்ட். எனவே என்னுடைய செல்போன் எண்ணுக்கு ஓடிபிக்கு பதிலாக என் மனைவிக்கு போன் கால் வந்தது. என் மனைவியிடம் பேசிய அந்த மோசடி பேர்வழிகள் வங்கியிலிருந்து அழைப்பதாகவே சொன்னார்களாம். ஆனால் அவர்களுடைய டிஸ்பிளே பிக்சரில் சிபிஐசி இந்தியா என இருந்ததாம். அவர்கள் 3 முறையும் கால் செய்து ஹிந்தி மொழியில் பேசியதாக என் மனைவி சொன்னார். மேலும் ரூ99,999 பணப்பரிவர்த்தனையை நீங்கள் செய்தீர்களா என்றும் கேட்டனராம்.

    OUR PRIVATE DATA IS NOT SAFE IN #DigitalIndia!

    On Sunday, ₹99,999 was stolen from my @AxisBank personal savings account through a net banking transfer via @IDFCFIRSTBank-@BillDesk, bypassing all normal safety protocols.

    An OTP, the standard protocol for such transactions, was…
    — Dayanidhi Maran தயாநிதி மாறன் (@Dayanidhi_Maran) October 10, 2023

என் மனைவி சொன்னதை கேட்டு சந்தேகமடைந்த நான் என்னுடைய அனைத்து அக்கவுண்ட்களையும் பிளாக் செய்துவிட்டேன். ஆனால் எனக்கு எழும் சந்தேகம் என்னவென்றால் என்னுடைய தனிப்பட்ட விவரங்கள் அவர்களுக்கு எப்படி கிடைத்தது, நான் வங்கிக் கணக்குகளை பிளாக் செய்தும் அவர்களால் எப்படி என் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடிந்தது? இதுகுறித்து ஆக்ஸிஸ் வங்கியிடம் கேட்டேன். இந்த பண பரிவர்த்தனை என் அனுமதி இல்லாமல், என் செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணே தேவைப்படாமல் எப்படி நடந்தது என்பது அவர்களுக்கும் தெரியவில்லை.

தொழில்நுட்பம் குறித்து நன்கு அறிந்தவர்கள், தனிவிவரங்களை எச்சரிக்கையாக வைத்திருக்கும் என்னை போன்றோரிடமே இப்படி மோசடி நடந்தால் முதல் முறையாக டிஜிட்டல் பணபரிவர்த்தனை செய்வோர், மூத்த குடிமக்களின் விவரங்கள் எப்படி பாதுகாப்பாக இருக்கும்?

"ஹிந்தி கால்.." தயாநிதி மாறன் வங்கி கணக்கிலிருந்து சட்டென மாயமான பணம்.. என்ன ஒரு ஃப்ராடுத்தனம்

நான் எம்பியாக இருப்பதால் சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடந்த காலங்களில் கடிதம் எழுதினேன். ஆனால் இன்று நானே பாதிக்கப்பட்டவனாகிவிட்டேன். எனக்கு நீதி வேண்டும். இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பேற்பது?

ஜனவரி 2020 ஆம் ஆண்டு முதல் ஜூன் 2023 ஆம் ஆண்டு வரை 75 சதவீத சைபர் கிரைம் மோசடிகள் மூலம் பணம் பறிக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. ஆதார் அட்டை விவரங்களை திருடுவதும் செல்போனை, கம்ப்யூட்டரை ஹேக் செய்வதும் தற்போது செய்திகளில் படித்து வருகிறோம். தனிப்பட்ட நபர்களின் விவரங்களை பாதுகாக்க மத்திய அரசு எந்த மாதிரியான நடவடிக்கையை எடுத்துள்ளது? இது குறித்து நிதியமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா, எனக்கு பதில் வேண்டும் என அந்த பதிவில் தயாநிதி மாறன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: