kalaingar seythikal reshma : ஒன்றிய அரசுக்கு வரியாக தமிழ்நாடு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் நமக்கு 29 பைசாதான் திரும்பக் கிடைப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் அக்.9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் தமிழ்நாடு அரசின் முதல் துணை மதிப்பீடுகளை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். மேலும் அன்றைய தினமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த காவிரி விவகாரம் தொடர்பான தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பின்னர் இரண்டாவது நாளான நேற்று நடைபெற்ற கூட்டத் தொடரில், வரி மதிப்பீட்டு ஆண்டில் ரூபாய் ஐம்பதாயிரத்திற்குக் குறைவாக வரி, வட்டி, அபராதத் தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு இந்நிலுவைத் தொகையானது முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என விதி 110-ன்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனிடையே தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பதில் அளித்து அவர் பேசியதாவது, "வருவாயை பெருக்கக்கூடிய வகையில் நிதித்துறை பலவகையில் செயல்பட்டு வருகிறது. தொடர் நடவடிக்கையின் காரணமாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், 10.6% & 13.78% ஆண்டுக்காண்டு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
“தமிழ்நாட்டுக்கு ரூ.2.08 லட்சம் கோடி, உ.பி-க்கு ரூ.9.04 லட்சம் கோடி..” : வஞ்சிக்கும் ஒன்றிய அரசு !
கடந்த 2022, ஜூன் 30 முதல் GST வரி இழைப்பீட்டு முறை முடிவுற்றது விளைவாக தமிழ்நாட்டுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை GST இழப்பீட்டு தொகையாக ரூ.9,603 கோடியை ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாடு பெற்றுள்ளது. ஆனால் நடப்பாண்டில் ரூ.3,533 கோடி வரை மட்டுமே பெற்றுள்ளோம்.
ஒன்றிய அரசுக்கு வரியாக தமிழ்நாடு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் நமக்கு 29 பைசாதான் திரும்பக் கிடைக்கிறது. பா.ஜ.க. ஆளும் மாநிலம் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கு 2.73 ரூபாய் திரும்பக் கிடைக்கிறது. 2014 முதல் 2022 வரை ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு ரூ.5.16 லட்சம் கோடி. ஆனால் வரிப் பகிர்வாக நமக்குக் கிடைத்தது வெறும் ரூ.2.08 லட்சம் கோடி.
அதே சமயத்தில் உ.பி.யின் பங்களிப்பு ரூ.2.24 லட்சம் கோடி. ஆனால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது ரூ.9.04 லட்சம் கோடி. உத்தர பிரதேசம், பீகாருக்கு 200% பேரிடர் நிதி வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டிற்கு 64% மட்டுமே வழங்கப்படுகிறது. நிதிப்பகிர்வில் ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது" என்றார்.
“தமிழ்நாட்டுக்கு ரூ.2.08 லட்சம் கோடி, உ.பி-க்கு ரூ.9.04 லட்சம் கோடி..” : வஞ்சிக்கும் ஒன்றிய அரசு !
கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் தொழில்துறை மற்றும் தமிழ்வளர்ச்சி துறை குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றபோது, பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் "பிரதமர் மோடி வரும் போதெல்லாம் Go back modi என கூறி வந்தாலும் தமிழ்நாட்டிற்கு 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் பாதுகாப்புத் துறைக்கான திட்டம் கிடைத்துள்ளது" என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய அப்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், "நமது பணம்தான் நமக்கு திருப்பி வருகிறதே தவிர ஒன்றிய அரசு ஏதோ கருணையின் அடிப்படையில் எந்த நிதியை ஒதுக்கவில்லை. வளர்ச்சி மிகுந்த மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் போன்றவை ஒன்றிய அரசுக்கு ஒரு ரூபாய் ஈட்டிக் கொடுத்தால் அதிலிருந்து சிறிய அளவிலான நிதியே திரும்பி வருகிறது. அது வரியாக இருந்தாலும் சரி. மானியமாக இருந்தாலும் சரி.
ஆகவே வேறு எங்கேயோ ஈட்டப்பட்ட பணத்தை ஒன்றும் கொடுத்துவிடவில்லை. இது நிதிக்குழு கொடுத்த குறிப்புகளை கொண்டு வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாட்டு பங்கு 9.16 சதவிகிதமாக இருக்கிறது. ஒன்றிய அரசு கொடுக்கும் பங்கு என்னவோ வெறும் 4.07 சதவிகிதமாக மட்டுமே இருக்கிறது.
ஆனால் உத்தர பிரதேசத்தின் உற்பத்தியில் 9.048 சதவிகிதம்தான். நிதிப்பங்கு என்னவோ 17 சதவிகிதமாக இருக்கிறது. ஆகவே மாநிலங்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மக்களுடைய பணம் மாநிலங்களுக்கே திருப்பி கொடுக்கப்படுகிறது. அதுவும் ஒரு ரூபாய் கொடுத்தால் வெறும் 35-40 பைசாதான் திருப்பியே கொடுக்கிறார்கள். ஆக, இது கருணையின் அடிப்படையில் கொடுக்கப்படுவது இல்லை" என தெளிவுபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக