tamil.oneindia. - Vigneshkumar P : சென்னை: சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய சோனியா காந்தி, பெண்கள் முன்னேற்றத்திற்குத் தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுப் பேசினார்.
இன்று சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் திமுக மகளிர் அணி சார்பில் சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் தேசிய அளவில் இருந்து பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். மேலும், பிரியங்கா காந்தி, சுப்ரியா சுலே எனப் பல தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் சகோதர, சகோதரிகளே வணக்கம் என்று கூறி சோனியா காந்தி தனது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய சோனியா காந்தி, "இந்தியாவின் மகனான கருணாநிதியின் சாதனைகளை நினைவுகூர இங்குக் கூடியுள்ளோம்.. வாழ்நாள் முழுதும் மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர் கருணாநிதி.. மாநிலம், மொழி, சாதி, மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனுக்குச் சிந்தித்தவர் கருணாநிதி.. அவர் கொண்டு வந்த பல திட்டங்கள் மகளிர் வளர்ச்சி சார்ந்தவை.
திமுக மகளிர் உரிமை மாநாடு! 5 பாலூட்டும் தாய்மார்கள் அறை! அண்ணணுக்கு உணர்வுபூர்வமாக கனிமொழி மரியாதை! திமுக மகளிர் உரிமை மாநாடு! 5 பாலூட்டும் தாய்மார்கள் அறை! அண்ணணுக்கு உணர்வுபூர்வமாக கனிமொழி மரியாதை!
அறிவியல், விளையாட்டு என்று பல்வேறு துறைகளில் இப்போது மகளிர் சாதித்து வருகிறார்கள்.. மரபு வழி சமூகம், ஆண் ஆதிக்கம் தாண்டி பெண்கள் சாதித்துள்ளனர். பல்வேறு தடைகளைத் தாண்டி பெண்கள் இப்போது சாதனை செய்து வருகிறார்கள். இருப்பினும், இப்போதும் பல தடைகளைத் தாண்டி நாம் செல்ல வேண்டி இருக்கிறது.
காந்தி தலைமையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சுதந்திரப் போராட்டம் மகளிர் சமத்துவத்தை முன்னிலைப்படுத்தியது.. 1928இல் அரசியல் சாசன சட்ட வரைவை மோதிலால் நேரு தலைமையிலான குழு தயார் செய்தது.. அதைத் தொடர்ந்து கராச்சியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கராச்சி தீர்மானம் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டும் பெண்கள் உரிமையை நிலைநாட்டியது. வாக்குரிமை உள்ளிட்ட உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது.
ஆண் ஒருவரைப் படிக்க வைத்தால் தனிநபரை மட்டுமே படிக்க வைக்கிறாய் என்று பொருள்.. பெண்ணுக்குக் கல்வி கற்றுக் கொடுத்தால், ஒரு குடும்பத்திற்கே கல்வி கற்றுத் தரப்படுகிறது என்று அர்த்தம்.. காந்தியின் அறவழி போராட்டம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தது.. இந்திரா காந்தியின் தலைமைப் பண்பு, பெண் எப்படி தலைமை ஏற்றுச் செயல்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தது.
பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார் ராஜீவ் காந்தி. அதேபோல யுபிஏ ஆட்சியிலும் பெண்கள் உரிமை சார்ந்து பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் 2010இல் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. லோக்சபாவில் கருத்து ஒற்றுமை வராததால் அப்போது அதை நிறைவேற்ற முடியவில்லை.
இப்போது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நமது தொடர் போராட்டத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும், அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பதில் அனைவருக்கும் குழப்பும் இருக்கிறது.. "இந்தியா" கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த சட்டம் அமலுக்கு வரும்.
அண்ணா, கருணாநிதி செயல்படுத்திய திட்டங்கள் பெண்கள் வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.. கருணாநிதி கொண்டு வந்த திட்டங்களால் தான் அரசுப் பணிகளில் உள்ள பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இப்போதைய ஸ்டாலின் அரசு எடுத்த நடவடிக்கைகளால் அது 40% ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மருத்துவத்துறையில் கருணாநிதி அரசு எடுத்த நடவடிக்கை தாய் சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது
கடந்த 9 ஆண்டுகளாக மோடி அரசு பெண் உரிமைகள் சார்ந்து எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.. பாஜக அரசு பெண்களை அடையாள சின்னங்களாக மாற்றி, உரிமைகளைப் பறிக்கிறது.. "இந்தியா" நிச்சயம் வெல்லும்.. அதன் பிறகே "இந்தியா" கூட்டணி பெண்களுக்கு உரிமையை பெற்று தரும் நடவடிக்கைகளை நிச்சயம் எடுக்கும்" என்று அவர் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக