செவ்வாய், 16 மே, 2023

சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுக்க தயாராகும் டிகே சிவக்குமார்? .. கர்நாடக...

 tamil.oneindia.com  - Mani Singh S  :  பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வர் பதவியை யாருக்கு என்பதை கட்சி மேலிடம் இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறிய சித்தராமையாவிற்கு வாழ்த்துக்கள் என்று முதல்வர் பதவிக்கு போட்டி போடும் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 13 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியானது. இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.


காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில்,
அங்கு முதல்வர் பதவியைக் கைப்பற்ற டிகே சிவக்குமார் முன்னாள் முதல்வர் சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு தரப்பினரை சேர்ந்தவர்களும் ஆதரவாளர்களும் இது தொடர்பாக அவரவர் ஆதரவு தலைவர்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என கோஷங்களையும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

இதனால், அங்கு முதல்வரை தேர்வு செய்வதில் கட்சி மேலிடத்திற்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. நேற்று முன் தினம் பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தலைமைக்கு அளிக்கப்படுவதாக எம்.எல்.ஏக்கள் தீர்மானம் நிறைவேற்றினர். இதையடுத்து எம்.எல்.ஏக்களின் விருப்பத்தை பெற்று தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் கட்சியின் மேலிட தலைவர்கள் அறிக்கையாக கொடுத்துள்ளனர்.
Recommended Video

Dravidian Model காலவாதியானது என Governor சொல்வது அபத்தம் - Journalist Mani Interview

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியிடம் ஆலோசித்த பிறகு கர்நாடக முதல்வர் யார் என்ற அறிவிப்பை கட்சி மேலிடம் அறிவிக்க உள்ளது. இதனிடையே, கட்சியின் மேலிட அழைப்பை ஏற்று சித்தராமையா டெல்லி சென்றுள்ளார். ஆனால் டிகே சிவக்குமார் டெல்லி செல்லவில்லை.

தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும் கட்சியின் மேலிட உத்தரவுக்கு கட்டுப்படுவேன் என்று டிகே சிவக்குமார் கூறி வருகிறார். டிகே சிவக்குமாரின் இந்த பேச்சு, கட்சி மேலிடம் சித்தராமையாவை முதல்வராக தெர்வு செய்துவிட்டதை சூசகமாக வெளிப்படுத்தும் வகையில் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறும் கருத்தாக உள்ளது.

இந்த நிலையில், பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் டிகே சிவக்குமார் கூறிய கருத்தும் கவனம் பெற்றுள்ளது. தனக்குத்தான் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக சித்தராமையா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த டிகே சிவக்குமார், " ஆல் தி பெஸ்ட்..அவருக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். குட்லக். எனக்கு எதுவும் அவர் சொல்வது பற்றி தெரியாது" என்றார்.

டிகே சிவக்குமார் தொடர்ந்து கூறுகையில், " நான் பிளாக் மெயில் செய்ய மாட்டேன். நான் அப்படி பட்டவன் கிடையாது. நான் குழந்தை கிடையாது. எந்த வலையிலும் விழ மாட்டேன்'என்றார். முன்னதாக பேட்டி அளித்த டிகே சிவக்குமார் முதல்வர் யார் என்பதை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முடிவு செய்வார். எனக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது என்பது முக்கியம் அல்ல.

135 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் தான். நான் தளி ஆள். தனியாகவே பணியாற்றிள்ளேன். காங்கிரஸ்-மதசார்பற்ற கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, எங்கள் கட்சியை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டு விலகி சென்றனர். அப்போது கூட நான் தைரியம் இழக்காமல் கட்சி பணியாற்றி கட்சியை வலுப்படுத்தினேன்" என்று கூறியிருந்தார்.

கருத்துகள் இல்லை: