புதன், 10 மே, 2023

உதவி இயக்குனர் மீது கிரிமினல் வழக்கு; கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பா.ரஞ்சித்


 tamil.newsbytesapp.com : இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணிபுரியும் விடுதலை சிகப்பி என்பவரின் மீது கிரிமினல் வழக்கு பாய்ந்ததையடுத்து,
கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரஞ்சித். அவர் இது குறித்து ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த இலக்கிய நிகழ்வில் 'மலக்குழி மரணம்' எனும் தலைப்பில் கவிஞர் விடுதலை சிகப்பி எனும் விக்னேஸ்வரன் கவிதை ஒன்றை வாசித்திருந்தார்.
அக்கவிதை, நாடு முழுக்கத் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் மலக்குழி மரணங்கள் குறித்த அக்கறையை வெளிப்படுத்துவதாகும்" "
ஒரு படைப்பின் மையப்பொருளை விளங்கிக்கொள்ளாமல் அல்லது விளங்கிக்கொள்ள விரும்பாமல் படைப்புச் சுதந்திரத்திற்கு எதிராகத் தொடுத்த வழக்கைப் பதிவு செய்திருக்கும் காவல்துறை மற்றும் தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது,"என ரஞ்சித் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

pa.ranjitஹ : இந்தியா முழுவதும் தொடரும் மலக்குழி மரணங்களை கண்டித்து, அதன் தீவிரத்தை உணர்த்தும் விதமாக இந்து புராண கதாபாத்திரங்களை, டாக்டர் பாபாசகேப் அம்பேத்கர் வழியில் நின்று , கடவுள்களாக இருந்தாலும் மலக்குழியில் இறங்கினால் அவர்களின் நிலை என்னவாகும் என்று புனைவின் வழியாக கவிதை வாசித்தார்…

Pa ranjith

 ப.விடுதலை சிகப்பி:

வீட்டு மலக்குழியில்
ஒருவாரமாய் அடைப்பு
அடைப்பெடுக்க எங்கெங்கோ சுற்றி அந்தணர் கிடைக்காமல்
அயோத்தி சென்று ராமனைக் கையோடு கூட்டிவந்தேன்
முதலில் மறுத்தவனிடம் பணம்
கூடத் தருவதாய்க் கூறினேன்
ஒரு புட்டிச் சாராயத்தை ஒரே மூச்சில் குடித்துக் குழிக்குள் குதித்தான் ராமன்
இலக்குவனும் அனுமனும்
துண்டு பீடியை ஆளுக்கொரு
இழு இழுத்தப்பின்
வாளி கொச்சக்கயிறு அகப்பை
மூங்கில் கழியோடு
உள்ளே இறங்கினார்கள்
கணவன் கொழுந்தனின் வில் அம்புகளையும் அனுமனின் கதாயுதத்தையும் காவல் காத்துகொண்டிருந்த சீதாபிராட்டி
பசி என்றாள்
உயர்சாதி ஏழையின் பசி கொடுமையானது எனவே கடைத்தெருவுக்குச் சென்று திரும்பினேன்
மலக்குழியை மூடிவிட்டு இலங்கை நோக்கிச் சென்றிருந்தாள் போல சீதாபிராட்டி
அருகில் கிடந்த சிகரெட் அட்டையில் எழுதியிருந்தாள்
மன்றாடிக் கேட்கிறேன் மலக்குழியைத் திறக்கவே வேண்டாமென்று
எனக்கும் மனமில்லை
மலக்குழியைத் திறப்பதற்கு...

கருத்துகள் இல்லை: