புதன், 17 நவம்பர், 2021

சபரிமலையில் தமிழ்நாடு அறநிலைய துறையின் மருத்துவ சேவை ஆரம்பம்

Diwa :  சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு கேரளா கர்நாடக ஆந்திரா தெலுங்கான மகாராஸ்டிரா என நம் நாட்டின் பல மாநிலத்தவர்கள் வருகை தந்தாலும் அக்கோவில் அமைந்துள்ள கேரளா மாநிலத்தவரைவிட மிக அதிகமான எண்ணிக்கையில் தமிழ்நாட்டு பக்தர்கள்தான் தர்ம சாஸ்தா ஐய்யப்பனை கண்டு வணங்கிட வருடா வருடம் சபரிமலைக்கு செல்கின்றனர்...
சபரிமலை கோவிலுக்கு வரும் அனைத்து மாநில பக்தர்களுக்கும் தேவையான தங்குமிட வசதி உணவு வசதி உடமை பாதுகாப்பு வசதி மற்றும் மருத்துவ சேவை உட்பட அனைத்து சேவைகளையும் 24*7 மணி நேரமும் கன்னும் கருத்துமாக இருந்து கண்காணித்து சேவை செய்து வருகிறது திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு எனும் கேரளா மாநில அரசினுடைய கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பு.
கேரளா மாநிலத்தவர் மட்டுமல்ல உள்ள பிற மாநிலங்களிலிருந்து இக்கோவிலுக்கு வரும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவது இந்த திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுதான்.


இக்கோவிலுக்கு வரும் மற்ற மாநிலங்களின் சார்பில் இன்றுவரை சபரிமலையில் தனி அலுவலகமோ தேவஸ்தான போர்டு அலுவலர்களோ இல்லை...
காடு மலை மேடு யானை புலி காட்டு விலங்குகள் என பரந்து விரிந்துள்ள  அடர்ந்த காட்டில் அமைந்துள்ள, போக்குவரத்து வசதியற்ற காட்டுப்பகுதியில் அமைந்துள்ள சபரிமலை கோவிலுக்கு வரும் பல்வேறு மொழி இனம் கலாச்சாரம் கொண்ட கோடிக்கணக்கான மக்கள்  ஒன்று கூடும் இடத்தில் மலையாள மொழியையும் கலாசாரத்தையும் கொண்ட கேரளா மாநிலத்தவர்கள் ப
சேவையாற்றும் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு மட்டுமே இயங்கி வருகிறது.
இதுவரை இப்படியான ஒரு சேவை மையம் இக்கோவில் அமைந்துள்ள கேரளா மாநிலத்தை தவிர வேறு எந்த மாநிலத்துக்கும் அரசு சார்பிலான சேவை மையம் இல்லாத நிலையில்,
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி கேரள மாநில முதல்வரிடம் இதுகுறித்து கலந்தலோசித்து சபரிமலையில் தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை சார்பில் ஒரு சேவை மையம் ஒன்றை சபரிமலை கோவில் சுற்றுபுற வாளகத்தில் அமைத்துக்கொள்ள இடம் ஒன்றை ஒதுக்கி தர கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும். அக்கோரிக்கையை கேரள மாநில முதல்வரும் ஏற்றுக்கொண்டதாகவும். இதையடுத்து தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சேவை மையம் ஒன்றை சபரிமலையில் விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும். இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பை ஒரிரு நாட்களில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர் பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்...

குறிப்பு :

சபரிமலையின் அதிதீவீர பக்தர் அடிக்கடி சபரிமலைக்கு செல்பவர் கேரளாவிலிருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சென்னையை சார்ந்தவர்... தேர்தல் நேரத்தில் இந்து விரோத கட்சி என அதிமுகவினரால் பொய் பிரச்சாரம் செய்யப்பட்ட திமுகவை சார்ந்தவர்
தமிழ்நாட்டின் முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் இடும் கட்டளையை சிரமேற்கொண்டு உடனடியாய் நிறைவேற்றிடும் செயல் புயல் வீரருமான திரு.சேகர் பாபு அவர்கள்தான் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு அமைச்சர்...
எந்த திமுகவை இந்து விரோதி என சொன்னார்களோ அந்த திமுகதான் இந்து அறநிலைய துறை என ஒரு துறை இருப்பதே தெரியாத அளவுக்கு  முடங்கி கிடந்த தமிழ்நாடு இந்து சமய அறநிலையை துறையை மீட்டெடுத்து அதன் மூலம் இந்து பக்தர்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.
தயை கூர்ந்து இப்போதாவது இந்துக்களுக்கு யார் நன்மை செய்கிறார்கள் என நடுநிலை குமார்கள் சிந்திக்கட்டும்...

அகில பாரத அய்யப்பா சேவ சங்கம்.. தமிழ்நாடு அய்யப்பா சேவ சங்கம் என பல்வேறு பெயர்களில் ஐயப்ப சேவ சங்கங்கள் சபரிமலையில் தனி ஆவர்த்தனம் செய்து வந்தாலும் அவை அனைத்தும் தனியார் அமைப்புகளே..
தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்காக சேவை மையம் என்று ஒன்று அமையப்போவது திமுகவின் ஆட்சியில்தான்
நாளை கார்த்திகை மாதம் 1-ஆம் நாள் சபரிமலை மண்டல பூஜை கால நடை திறப்பு....
சுவாமியே சரணம் ஐய்யப்பா..
சுவாமியே சரணம் ஐய்யப்பா..
 Diwa

கருத்துகள் இல்லை: