Antony Valan : ராதாகிருஷ்ணன்! சுகாதாரத்துறையின் நேற்றைய அரசாணையில் ஜெயலலிதாவை பாராட்ட மறந்துட்டீங்க பாஸ்
திமுக ஆட்சியில் மருத்துவதுறையின் அரசாணைகளில் இன்னமும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் குட்கா விஜயபாஸ்கரை நாலு நக்கு நக்கி பாராட்டலன்னா அரசாணைகள் முழுமை அடையாது போல.
சுகாதாரத்துறை செயலரின் இது போன்ற அயோக்கியத்தனங்களை திமுக அரசு வேடிக்கை பார்த்துட்டு மொண்ணைகளா இருப்பது தான் கடுப்பாகுது..
ஜெயலலிதா ஆட்சியில் இந்த மாதிரி அரசாணை ஒண்ணு வந்திருந்தா இன்னேரம் ராதாகிருஷ்ணன் இருந்த இடமும் தடமும் தெரியாமலே போய் இருந்திருக்கும்..
அரசியல் செய்ய வேண்டிய இடங்களில் கட்டாயம் அரசியல் செய்ய வேண்டும்.
கலைஞர் எத்தனையோ மருத்துவ சுகாதாரத்துறை திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வந்திருக்கிறார்.என்றாவது ஒரு நாள் அதிமுக ஆட்சியில் அதைப்பற்றி ஒரு வரி பேசி இருப்பார்களா..எந்த அரசாணையிலாவது கலைஞர் பெயர் வந்திருக்குமா..
கலைஞர் கட்டிய பேருந்து நிலையம் சட்டமன்றம் மெட்ரோ என்று எல்லாவற்றிலும் கலைஞர் பெயர் இருந்த இடங்களில் அதை அழித்து விட்டு ஜெயலலிதா பெயரை இட்டு நிரப்பினார்கள்..நாம் அந்த அளவுக்கு கேவலமாக போக வேண்டாம்..
ஆனால் நாம் கொண்டு வரும் திட்டங்களில் அரசாணைகளில் முன்னாள் அதிமுக அமைச்சர் அதிலும் குறிப்பா குட்கா பாஸ்கர் என்ற உலக மகா திருடனின் பெயரை சொல்லி பாராட்டி தான் அராசணை வெளியிட வேண்டுமா..
ஜெயலலிதாவை விடுங்க..அடிமை டயர்நக்கி எடப்பாடி ஆட்சியில் கூட இது போன்று ஒரு அறிக்கை ஏதாவது திமுக ஆட்சியை பாராட்டி அல்லது அமைச்சர்களை பாராட்டி வந்திருக்குமா..
குறிப்பிட்ட அரசாணையில் ஆலோசகர்கள் என்ற பெயரில் சில மருத்துவர்கள் பெயர்கள் இடம் பெற்று இருக்கின்றன..அதில் கூட என்ன பாகுபாடு பாருங்க..செந்தில் என்ற மருத்துவர்.
அவர் விஜயபாஸ்கரின் அல்லக்கை என்பது ஊருக்கே தெரியும்.. குட்கா விஜயபாஸ்கர் விராலி மலையில் வேட்புமனு தாக்கல் செய்ய போன போது உடனிருக்கும் அளவுக்கு அவனது அல்லக்கை. அவரது பெயருக்கு பின்னால் மருத்துவர் சங்க தலைவர் என்றெல்லாம் விளம்பரம்..
அதுவே மருத்துவர் சாமிநாதன் மற்றும் அகிலனுக்கு ஆரம்ப சுகாதார மருத்துவர் என்பது போல எதற்கு இந்த பாகுபாடு..
அவர் மருத்துவர் சங்கத்தில் பொறுப்பில் இல்லியா..அதை ஏன் போடல..
பொறுப்புகளை போடுறதா இருந்தா எல்லார்க்கும் அவரவர் வகிக்கும் சங்க பதவிகளை போடணும்..இல்லன்னா எல்லாருக்கும் எந்த மருத்துவமனையில் பணி செய்கிறார்கள் என்பதோடு நிறுத்திக்கணும்..
இது போன்று மானே தேனே பொன்மானே என்று இன்னமும் விஜயபாஸ்கரை நக்கிக் கொண்டிருக்க காரணமே இந்த செந்தில் மற்றும் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அல்லக்கை கும்பல்கள் தான்...
குட்கா பாஸ்கரின் வழக்குகள் சூடு பிடிச்ச மாதிரியும் தெரியல..அவனது கொரானா ஊழல் குட்கா ஊழல் இடைத்தேர்தலில் பணம் கொடுத்த வழக்குகள் பற்றி சத்தமே இல்ல..
அதிமுகவின் மற்ற அமைச்சர்களை எல்லாம் நோண்டுறீங்க.. எடப்பாடியை எல்லாம் லைட்டா மிரட்டுறீங்க. ஆனா குட்கா மேல கைய வைக்க மாட்டேங்குறீங்க..அவன் ஆட்களை கூட தொட மாட்டேன் என்கிறீர்களே என்ன காரணம்.. ஏதும் டீலிங்கா.
நமக்கு ஆப்படிக்கிற துரோக அதிகாரிகளை குட்கா பாஸ்கரின் அல்லக்கைகளை அரசு மருத்துவதுறையில் களையெடுக்காமல் இன்னமும் விட்டு வைப்பது நாளை நமக்கு தான் ஆப்பாக முடியும்..
ஆன்டனி வளன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக