Rayar A - Oneindia Tamil : லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் உயிரிழந்தனர்.
மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் கூட்டத்தில் காரை மோத செய்தும், துப்பாக்கியால் சுட்டும் 3 பேரை கொன்றதாக விவசாயிகள் பகீர் குற்றம்சாட்டி உள்ளனர்.
மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது.
ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது.
மத்திய அரசு மத்திய அரசு ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறினார்கள்.
விவசாயிகளை அடிக்கடி பேச்சுவார்தைக்கு அழைக்கும் மத்திய அரசு, வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதில் பிடிவாதமாக உள்ளது.
அடுத்த ஆண்டு உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் இங்கு பாஜகவுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகினறனர்.
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி அருகே உள்ள மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கிராமத்தில் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதில் உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருந்தார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு செல்லும் பாஜக தலைவர்களுக்கு கருப்பு கொடி காட்டி விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இதனால் லக்கிம்பூரில் திரண்ட ஏராளமான விவசாயிகள் திரண்டு கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினார்கள். தொகுதி மேம்பாட்டு நிதி 3-வது ஆண்டாக கட்...மக்களுக்கு எதுவுமே செய்ய முடியலையே... குமுறும் எம்.பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதி 3-வது ஆண்டாக கட்...மக்களுக்கு எதுவுமே செய்ய முடியலையே... குமுறும் எம்.பிக்கள் கடும் வன்முறை கடும் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர்.
மேலும், பாஜக தொண்டர்கள் சிலரும் விவசாயிகளை கலைக்க முயன்றனர். இதற்கிடையே அங்கு காரில் வந்த மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் கூட்டத்தில் காரை மோத செய்ததாக கூறப்படுகிறது. இதில் 2 விவசாயிகள் இறந்து விட்டனர் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இதன்பிறகு கடும் வன்முறை மூண்டது. இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனின் கார் உள்பட பல கார்களை விவசாயிகள் தீ வைத்து கொளுத்தினார்கள்.
பாஜக தொண்டர்களுக்கும், விவசாயிகளுக்கும் மோதல் வெடித்தது. போலீசாரும் வன்முறையை கட்டுப்படுத்தினார்கள். இந்த வன்முறையில் விவசாயிகள், பாஜக தொண்டர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கார் மோதி 2 பேரை கொன்றது மட்டுமின்றி, ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இணை அமைச்சர் மறுப்பு இணை அமைச்சர் மறுப்பு ஆனால் இதனை மறுத்துள்ள மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, '' என் மகன் அந்த இடத்தில் இல்லை. பாஜக தொண்டர்கள் மீது தடியடி மற்றும் வாள்களால் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அங்கு இருந்தனர். என் மகன் அங்கு இருந்திருந்தால், அவன் உயிருடன் வெளியே வந்திருக்க மாட்டான். அந்த மர்ம நபர்கள் மக்களைக் கொன்றனர். கார்களை சேதப்படுத்தி தீ வைத்தனர். எங்களிடம் இதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது'' என்று கூறியுள்ளார்.
இந்த வன்முறையால் லக்கிம்பூர் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது. அந்த பகுதி மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பல இடங்களில் வன்முறை நடந்து வருகிறது. இதனால் உத்தரபிரதேசம் முழுவதும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 3 விவசாயிகளை கொன்ற மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனை கைது செய்ய வேண்டும் என்றும் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக