சனி, 3 அக்டோபர், 2020

Caste .Crime . Cremation சோள காட்டுக்குள் எங்கள் பிள்ளைகள் இழுத்து செல்லப்படுவார்கள்

Balamurugan S : · "வால்மிகீ சமூகத்தை சேர்ந்த எங்கள் பெண் பிள்ளைகள் ஆரம்ப கல்விக்கு மேல் படிக்க முடியாது...." "இந்த சோள காட்டுக்குள் எங்கள் பிள்ளைகள் இழுத்து செல்லப்படுவார்கள் என்ற அச்சம் எங்களுக்கு எப்போதும் இருக்கும்...." "நாங்கள் கொடுக்கும் காசை தண்ணீர் தெளித்த பின்பே கடைக்காரர்கள் எடுத்துக்கொள்வார்கள்..." "எங்க எம்எல்ஏ #RajivDiler வால்மிகீ சமூகம் தான்...ஆனால் அவர் எங்கள் சமூகத்தில் ஏற்பட்ட கறை... கல்யாண் சிங் (முன்னாள் முதல்வர்...பாஜக) காலத்திலிருந்தே இவன் தந்தை தொடங்கி மேல் சாதிக்காகவே (பார்ப்பனர், தாக்கூர்) வேலை செய்பவர்கள் பொதுவாக இந்த எம்எல்ஏ உட்கார தாக்கூர் சமூகத்தினர் நாற்காலி கொடுத்தாலும் அங்கே இந்த ஆள் தரையில் தான் உட்காருவான்... இன்றைக்கு எங்கள் வால்மீகி சமூக வீட்டில் இவனை தரையில் உட்கார வைத்துள்ளோம்..."
"இந்த எம்எல்ஏ உயர்சாதியினர் வீட்டுக்கு போகும் போது அவர்கள் கொடுப்பதை குடிக்க கையிலே கிளாஸ் கொண்டு செல்வான்.."
உத்தர பிரதேசம் எல்லாம் இன்னும் நூறாண்டுகள் பின் தங்கியே இருக்கிறது... TheHindu வில் பத்திரிக்கையாளர் Anujkumar Hathras ல் இளம்பெண் ரேப் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட பின்னணியில்...
"Caste, Crime, and a cremation ..." என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையை வாசித்தால் வேதனையாக இருக்கிறது....
யோவ் Rangaraj Pandey Ragunathacharya பாண்டே இந்த மாதிரி ஒரு மூடத்தனமான, பிற்போக்கு மாநிலத்தை சேர்ந்த நீ....எல்லாம். திராவிடம் தமிழ்நாட்டுக்கு செஞ்சத கேள்வி கேட்கிற..."
சிஸ்டத்த மாத்தணும் சொல்ற Writer Maridhas Annamalai Kuppusamy எல்லாம் உ.பி, பிகார், ம.பி, ராஜஸ்தான் போகலாமே... மாத்த வேண்டியது நெறைய இருக்கு!!!!
இவய்ங்க எல்லாருமே தமிழ்நாட்டை உ.பி, பிகார் போல மாத்தனும்னு துடிக்கிறாய்ங்க...

கருத்துகள் இல்லை: